அரசியல் இலங்கை செய்தி

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக இன்று போராட்டம்

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்ட மூலம்மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், 22 இற்கு எதிராக பாரிய போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்ட மூலம்மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், 22 இற்கு எதிராக பாரிய போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற நுழைவாயில் சந்தியில் இன்று முற்பகல் இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் என பல தரப்பிரும் இப்போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

அதேவேளை, அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று (24) முற்பகல் 11.30 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெறவுள்ளது.

மறுநாள் 25 ஆம் திகதியும் முற்பகல் 11.30 மணி முதல் இரவு 7 மணிவரை விவாதம் நடத்தப்பட்டு, அன்றிரவு வாக்கெடுப்பு நடத்தப்பட், நிறைவேற்றப்படவுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை