இந்தியா இலங்கை செய்தி

அனோஜனுக்காக களமிறங்குவாரா மோடி? மகஜர் கையளிப்பு

அனோஜன் சிவராசா விவகாரத்தில், இலங்கை அரசு அதிகாரபூர்வமாக சவுதி அரசை நாடி, கோரிக்கை விடுத்த பின், இது தொடர்பில் இந்திய அரசு தனது முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என இந்திய தூதர் சந்தோஷ்-ஜா தம்மை இன்று நேரடியாக சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் தெரிவித்தார்.

அனோஜன் சிவராசா விவகாரத்தில், இலங்கை அரசு அதிகாரபூர்வமாக சவுதி அரசை நாடி, கோரிக்கை விடுத்த பின், இது தொடர்பில் இந்திய அரசு தனது முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என இந்திய தூதர் சந்தோஷ்-ஜா தம்மை இன்று நேரடியாக சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் தெரிவித்தார்.

அனோஜன் சிவராஜா தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி பங்களிப்பை கோரி தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு, இன்று மாலை இந்திய தூதுவரை சந்தித்தது.

இதன் போது, மனோ எம்பி உடன், ஜமமு பொது செயலாளர் பரணீதரன் முருகேசு, உப தலைவர் பாரத் அருள்சாமி, மட்டகளப்பு மாவட்ட அமைப்பாளர் கோபி கணேசமூர்த்தி, ஆகியோரும் இடம் பெற்றனர்.

இலங்கை அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதே வேளை, அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு, அனோஜன் விவகாரத்துக்கு, ஒட்டு மொத்த இலங்கையர்கள் சார்பில் தீர்வு தேடவே தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது என இதன் போது மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்திய பிரதமருக்கான எழுத்து மூலமான மனு ஒன்றும் இச்சந்திப்பின்போது இந்திய தூதுவரிடம் கையளிக்கப்பட்டது.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை