இலங்கை செய்தி

வவுனியா ஆசிரியை மின்னேரியாவில் சடலமாக மீட்பு: விசாரணை தீவிரம்

வவுனியா - கோவில்குளம் இந்துக் கல்லூரி ஆசிரியரும், கலை இலக்கிய ஆர்வலருமான செல்வி வனிதா சேனாதிராஜா (வயது 41) பொலனறுவை, மின்னேரியா பகுதியில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா – கோவில்குளம் இந்துக் கல்லூரி ஆசிரியரும், கலை இலக்கிய ஆர்வலருமான செல்வி வனிதா சேனாதிராஜா (வயது 41) பொலனறுவை, மின்னேரியா பகுதியில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த வனிதா சேனாதிராஜா, வவுனியா, கோவில்குளம் இந்துக் கல்லூரியின் ஆசிரியராகவும், வவுனியா விசேட காணி மத்தியஸ்த சபை உறுப்பினராகவும், அறியப்பட்ட கலை இலக்கிய ஆர்வலராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

பொலனறுவை, மின்னேரியா பகுதியில் உள்ள விடுதி ஒன்றிலிருந்தே இவரது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்காகச் சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவரின் மரணம் தொடர்பான தீவிர விசாரணைகளை மின்னேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை