உலகம் செய்தி

கர்ப்பிணி பெண் உட்பட 11 பேர் சுட்டுக்கொலை: தென்னாபிரிக்காவில் பயங்கரம்

தென்னாப்பிரிக்காவின் டர்பன் (Durban) நகரில்  குடியிருப்பு பகுதி ஒன்றில் உள்ள வீட்டிற்குள் புகுந்த ஆயுதமேந்திய கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவின் டர்பன் (Durban) நகரில்  குடியிருப்பு பகுதி ஒன்றில் உள்ள வீட்டிற்குள் புகுந்த ஆயுதமேந்திய கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்குச் சற்றே முன்னதாக (21:00 GMT) இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் நடைபெற்ற விருந்தொன்றில் மக்கள் ஒன்றுகூடியிருந்த வேளையிலேயே ஆயுததாரிகள் உள்ளே புகுந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் அங்கிருந்த அனைவரையும் ஒரே அறைக்குள் தள்ளிப் பூட்டி சுட்டுத் தள்ளியதாகவும், பலியான ஒருவருக்குச் சொந்தமான காரை தீயிட்டுப் கொளுத்தியதாகவும் உள்ளூர் ஊடகமான eNCA செய்தி வெளியிட்டுள்ளது.
காவல் துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, கொல்லப்பட்டவர்களில் சிலர் சந்தேகத்திற்குரிய சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகத் தென்னாப்பிரிக்கக் குற்றப் புலனாய்வுத் துறையின் கண்காணிப்பில் இருந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளதாக eNCA சுட்டிக்காட்டியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், எதிரெதிர் குழுக்களுக்கு இடையிலான மோதலை நிராகரிக்க முடியாது என காவல் துறை தெரிவித்துள்ளது.
சுமார் 6.2 கோடி மக்கள் தொகை கொண்ட தென்னாப்பிரிக்கா, உலகில் அதிகக் கொலை விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றாகக் காணப்படுவதுடன், அங்கு நாளொன்றுக்கு சராசரியாக 60 பேர் கொல்லப்படுகின்றனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி