அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் ஈரானுடன் விரைவான ஒப்பந்தத்தை எட்டும் நம்பிக்கையில் புதிய தாக்குதல்களை நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன. இதனால் பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வு குறித்த கவலைகள் சற்று தணிந்து, திங்கள்கிழமை தங்கம் விலை உயர்வைக் கண்டது. உலகம் செய்தி

தணிந்த பதற்றம்: தங்கம் விலை உயர்வு; கச்சா எண்ணெய் விலை சரிவு

  • August 3, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் ஈரானுடன் விரைவான ஒப்பந்தத்தை எட்டும் நம்பிக்கையில் புதிய தாக்குதல்களை நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன. இதனால் பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வு குறித்த கவலைகள் சற்று தணிந்து, திங்கள்கிழமை தங்கம் விலை உயர்வைக் கண்டது. சர்வதேச சந்தையில் GMT 0210 மணி நிலவரப்படி, ஸ்பாட் தங்கம் (Spot gold) 0.4% உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு $4,055.76 ஆக விற்பனையானது. அமெரிக்க தங்க பியூச்சர்ஸ் (U.S. gold futures) […]

ஈரான் மீதான பிரம்மாண்டமான வான்வழித் தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாகத் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டுடான புதிய பேச்சுவார்த்தைகள் திங்கள்கிழமை (இன்று) தொடங்கும் என்று கூறியுள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானுடன் இன்று பேச்சு: ட்ரம்ப் தகவல்

  • August 3, 2026
  • 0 Comments

ஈரான் மீதான பிரம்மாண்டமான வான்வழித் தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாகத் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டுடான புதிய பேச்சுவார்த்தைகள் திங்கள்கிழமை (இன்று) தொடங்கும் என்று கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை Air Force On விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தாக்குதல் தீவிரமடைவதை அவர்கள் பார்த்ததால், அதன் பரிமாணத்தை அறிந்துகொண்டனர். நாங்கள் தற்போது பேச்சுவார்த்தை வடிவில் அவர்களிடம் உரையாடி வருகிறோம். இது நாளை பிற்பகல் தொடங்குகிறது” என்று கூறினார். முன்னதாக தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக […]

ஆஸ்திரேலியா சிட்னி நகரின் மையப்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகே கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இருவர் படு காயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்தரேலியாவில் பயங்கரம்! எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகே சரிந்து விழுந்த கட்டிடம்

  • August 3, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா சிட்னி நகரின் மையப்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகே கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இருவர் படு காயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை முற்பகல் 11 மணி அளவில் ‘அல்டிமோ’ (Ultimo) பகுதியில் இடிபாடு ஏற்பட்டதாக அவசர உதவிப் பிரிவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், சுவரும் கூரையும் இடிந்து அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் மீது விழுந்திருப்பதைக் கண்டறிந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 60 மற்றும் 30 வயதுடைய […]

அரசியல் இலங்கை செய்தி

சிறைச்சாலையைக்கூட நிர்வகிக்க முடியவில்லை: அரசுமீது எதிரணி விமர்சனக் கணை தொடுப்பு

  • August 3, 2026
  • 0 Comments

“சிறைச்சாலைக் கட்டமைப்பைக் கூட முறையாக நிர்வகிக்க முடியாத தேசிய மக்கள் சக்தியினரால் இந்நாட்டை முறையாக ஆள முடியுமா? அவர்களால் நிச்சயமாக முடியாது. அதனால்தான் அவர்கள் ஏதேச்சாதிகார வழியில் பயணிக்க முற்படுகின்றனர்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாகச் சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது: “மஹர சிறைச்சாலையிலும் தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. சிறைச்சாலைகளைக் கூட இந்த ஆட்சியாளர்களால் முறையாக […]

இலங்கையில் பல பகுதிகளிலும் அடை மழை பெய்துவருகின்றது. மத்திய மாகாணத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் கன மழை: வெள்ள அபாயம்

  • August 3, 2026
  • 0 Comments

இலங்கையில் பல பகுதிகளிலும் அடை மழை பெய்துவருகின்றது. மத்திய மாகாணத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால், மகாவலி, களனி மற்றும் களு கங்கை ஆகியவற்றின் மேல்பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் […]

உலகின் மிக உயர்ந்த 14 சிகரங்களையும் மிகக் குறைந்த காலத்தில் அதிவேகமாக ஏறி சாதனை படைத்த புகழ்பெற்ற நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா, பாகிஸ்தானில் நடைபெற்ற மலையேற்றப் பயணத்தின் போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். உலகம் செய்தி

14 சிகரங்களில் ஏறி சாதனை படைத்த புர்ஜா உட்பட 10 மலையேற்ற வீரர்கள் பலி

  • August 2, 2026
  • 0 Comments

உலகின் மிக உயர்ந்த 14 சிகரங்களையும் மிகக் குறைந்த காலத்தில் அதிவேகமாக ஏறி சாதனை படைத்த புகழ்பெற்ற நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா, பாகிஸ்தானில் நடைபெற்ற மலையேற்றப் பயணத்தின் போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். “புரோட் பீக் (Broad Peak) சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து நிர்மல் ‘நிம்ஸ்டாய்’ புர்ஜா (துரதிர்ஷ்டவசமாக தனது உயிரை இழந்துவிட்டார் என்பதை அளவற்ற துயரத்துடனும் உடைந்த இதயத்துடனும் உறுதிப்படுத்துகிறோம்,” என்று அவரது மலையேற்றப் பயணத்தை ஒழுங்கமைத்த ‘எலைட் எக்ஸ்பெட்’ […]

மஹர சிறைச்சாலையில் கைதிகள் ஏற்படுத்திய கலவரம் கட்டுப்பாட்டுக்குள் இலங்கை செய்தி

மஹர சிறைச்சாலையில் கைதிகள் ஏற்படுத்திய கலவரம் கட்டுப்பாட்டுக்குள்

  • August 2, 2026
  • 0 Comments

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: “மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்காக நேற்று திறந்துவைக்கப்பட்ட புனர்வாழ்வு மையத்தின் கட்டிடம் முற்றாகச் சேதமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், புனர்வாழ்வு அலுவலகம் மற்றும் பிரதான அலுவலகம் என்பனவும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த அமைதியின்மையானது இன்று காலை வரை நீடித்தது. சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், விமானப்படையினர் […]

பிரான்ஸின் போர்டோக்ஸ் (Bordeaux) நகரின் மேற்குப் பகுதியில் உள்ள 42,000 ஹெக்டேயர்களைத் தீக்கிரையாக்கிய காட்டுத்தீ காரணமாக, இந்த வாரத்தில் சுமார் 224,000 மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா ஐரோப்பா செய்தி

காட்டுத் தீயைக் கட்டுபடுத்த ஐரோப்பாவில் தீயணைப்பு ஹெலிகொப்டர்களை களமிறக்கும் ஆஸ்திரேலியா

  • August 1, 2026
  • 0 Comments

பிரான்ஸின் போர்டோக்ஸ் (Bordeaux) நகரின் மேற்குப் பகுதியில் உள்ள 42,000 ஹெக்டேயர்களைத் தீக்கிரையாக்கிய காட்டுத்தீ காரணமாக, இந்த வாரத்தில் சுமார் 224,000 மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ‘எல் நினோ’ (El Niño) காரணியால் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் வெப்பம் காரணமாக, அட்லாண்டிக் கடற்கரை முதல் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி வரையிலான ஐரோப்பிய நாடுகளில் கடுமையான காட்டுத்தீ பரவி வருகின்றது. பிரான்ஸ் தவிர பிரித்தானியா (UK), ஸ்பெயின், ஜெர்மனி, கிரீஸ் […]

வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஸ்பெயினின் தன்னாட்சிப் பிரதேசமான 'செவுடா' (Ceuta) எல்லைக்குள் தரை மற்றும் கடல் வழியே நுழைந்த சுமார் 60,000 அகதிகளில் பெரும்பாலானோர், தானாகவே மீண்டும் மொராக்கோவிற்குத் திரும்பியுள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. ஐரோப்பா செய்தி

ஸ்பெயினின் எல்லையைக் கடக்க முயன்ற 67 அகதிகள் பலி

  • August 1, 2026
  • 0 Comments

வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஸ்பெயினின் தன்னாட்சிப் பிரதேசமான ‘செவுடா’ (Ceuta) எல்லைக்குள் தரை மற்றும் கடல் வழியே நுழைந்த சுமார் 60,000 அகதிகளில் பெரும்பாலானோர், தானாகவே மீண்டும் மொராக்கோவிற்குத் திரும்பியுள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. செவுடா எல்லைக்குள் நுழைய முயன்றபோது உயிரிழந்த அகதிகளின் எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி குறைந்தது 67 ஆக உயர்ந்துள்ளதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லைச் சுவரின் கடலலைத் தடுப்பில் ஏற முயன்றபோது நசுங்கியும், கடலில் மூழ்கியுமே பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளனர். எல்லைக்கு மறுபுறமுள்ள மொராக்கோ […]

மஹர சிறைச்சாலைக்குள் இன்று மாலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் 4 கைதிகள் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை செய்தி

மஹர சிறைக்குள் மோதல்: நான்கு கைதிகள் காயம்

  • August 1, 2026
  • 0 Comments

மஹர சிறைச்சாலைக்குள் இன்று மாலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் 4 கைதிகள் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. கைதிகள் சிலருக்கிடையில் ஏற்பட்ட மோதலாலேயே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. அத்துடன், சிறைச்சாலைக்குள் கட்டிடமொன்றில் தீ பரவலும் ஏற்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்காக களமிறக்கப்பட்டுள்ளனர். அதேபோல சிறைச்சாலைக்கு வெளியே கைதிகளின் உறவிகனர்கள் குவிந்துள்ளனர். தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் என்பனவும் சிறைச்சாலைக்குள் சென்றுள்ளன. காயமடைந்த நால்வர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.