இலங்கை செய்தி

இலங்கையின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ADB ஆராய்வு

இலங்கையின் பிரதான அபிவிருத்தி பங்காளிகளில் ஒருவரான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ADB 2026–2029 காலப்பகுதிக்குரிய இலங்கை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணிப்பாளர் ஷெனன் கௌலின் (Shannon Cowlin) ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் பிரதான அபிவிருத்தி பங்காளிகளில் ஒருவரான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ADB 2026–2029 காலப்பகுதிக்குரிய இலங்கை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணிப்பாளர் ஷெனன் கௌலின் (Shannon Cowlin) ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2027 ஆம் ஆண்டுக்கான வருடாந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, 2026 ஒக்டோபர் 05 மற்றும் 06 ஆகிய இரு தினங்களில் நடத்தப்படும் திட்ட மீளாய்வுக் கூட்டம் தொடர்பிலான பூர்வாங்கக் கலந்துரையாடலாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நீண்டகால திட்ட வரைபுக்குள் உள்வாங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களை இனங்காண்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் உரிமையைத் உறுதிப்படுத்தல், அரச நடைமுறைகளுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நடைமுறைகளுக்கும் இடையில் தெளிவான மற்றும் பயனுள்ள ஒருங்கிணைப்பைப் பேணுதல், அத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சலுகை அடிப்படையிலான நிதியியல் வளங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியைப் பயனுள்ள முறையில் பயன்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் அபிவிருத்தி வேகத்தை மேலும் துரிதப்படுத்தி, அரச நிதி இலக்குகளை விரைவாக அடைந்துகொள்வதில் எழும் சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முறைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி மேலதிக செயலாளர் டப்ளியு. டி. ஆர். கிரிசாந்த மற்றும் ஜனாதிபதி சிரேஷ்ட உதவிச் செயலாளர் கலாநிதி தனுஷ்க பெரேரா உள்ளிட்டோரும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை