உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் எண்ணெய் வளத்துறை அமைச்சர் ராஜினாமா: பின்னணி என்ன?

ஈரானின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் மொஹ்சென் பக்நேஜாத் (Mohsen Paknejad) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களாலேயே அவர் இம்முடிவை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் மொஹ்சென் பக்நேஜாத் (Mohsen Paknejad) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களாலேயே அவர் இம்முடிவை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்திற்குச் சொந்தமான தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ஹமீத் போவார்ட் (Hamid Bovard) இடைக்கால அமைச்சராகப் பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஒபெக் (OPEC) அமைப்பின் உறுப்பு நாடான ஈரானின் எண்ணெய் வளத்துறை அமைச்சராக ஆகஸ்ட் 2024 முதல் பணியாற்றி வந்த மொஹ்சென் பக்நேஜாத், ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்று வரும் போரினால் நாட்டின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள சூழலில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பக்நேஜாத் நீண்ட காலத்திற்கு முன்பே தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்து விட்டதாகவும், அவரது தொடர் வற்புறுத்தலின் பேரில் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாகவும் ஜனாதிபதி அலுவலகத்தின் செய்தி தொடர்பு துணைத் தலைவர் மெஹ்தி தபதாபே (Mehdi Tabatabaei) அரசுத் தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.

தனது ராஜினாமா செய்தி வெளியாவதற்கு முன்பாக அரசு ஊடகங்களிடம் பேசிய பக்நேஜாத், “நாம் விற்பனை செய்த எண்ணெய்க்கான வருவாய் இன்னமும் வந்துகொண்டுதான் இருக்கிறது; இறைவனின் அருளால் அது தொடர்ந்து வரும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி