சபாநாயகருக்கு எதிரான பிரேரணை: விவாதத்துக்கு எடுக்கப்படமாட்டாது
எதிர்க்கட்சியினரால் சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைவாகத் திருத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டிய குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நிர்ணயிக்கப்பட்ட ஒக்டோபர் 28 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து ஊடகங்களுக்கு மேலும் கருத்துத் தெரிவித்த சபை முதல்வர், எதிர்க்கட்சிகளால் […]













