யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன், ஆஸ்திரேலியா பேச்சு நடத்தி, உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று  ஆஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சி செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் (David Shoebridge)  வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலியா இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: நீதிகோரி ஆஸ்திரேலிய செனட் சபையில் ஒலித்த குரல்

  • August 28, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன், ஆஸ்திரேலியா பேச்சு நடத்தி, உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று  ஆஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சி செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் (David Shoebridge)  வலியுறுத்தியுள்ளார். “இலங்கைக்கு இது புதியதொரு கதையல்ல. நாடு முழுவதிலும் உள்ள சுமார் 20 மனிதப் புதை குழிப் பகுதிகளை மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) ஆவணப்படுத்தியுள்ளது. ஆனால் அவற்றில் ஒன்று கூட இதுவரை முழுமையாக விசாரணை செய்து முடிக்கப்படவில்லை” என செனட்டர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச […]

நேபாளம் மற்றும் சீனா கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லைப் பகுதியில், இமயமலை ஆற்றில் ஏற்பட்ட பிரம்மாண்ட பாறை மற்றும் சேறு சரிவு காரணமாக உருவான பேரழிவு வெள்ளத்தில் 390-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உலகம் செய்தி

392சடலங்கள் மீட்பு: 1,500 பேர் தொடர்ந்து மாயம்

  • August 28, 2026
  • 0 Comments

நேபாளம் மற்றும் சீனா கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லைப் பகுதியில், இமயமலை ஆற்றில் ஏற்பட்ட பிரம்மாண்ட பாறை மற்றும் சேறு சரிவு காரணமாக உருவான பேரழிவு வெள்ளத்தில் 390-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை அன்று மீட்புக் குழுவினர் சேற்றில் இறங்கித் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நேபாளத்தில் மட்டும் குறைந்தபட்சம் 392 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்டை பிராந்தியமான திபெத்தில் குறைந்தது மூன்று பேர் […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

‘ஐரோப்பாவில் நடந்த கொடூர இனப்படுகொலை’- போர்க்குற்றவாளி Ratko Mladic ஐ.நா.சிறையில் காலமானார்

  • August 27, 2026
  • 0 Comments

போஸ்னியப் போரின் (1992-1995)போது இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக வாழ்நாள் சிறைத்தண்டனையை எதிர்நோக்கிவந்த போஸ்னிய செர்பிய முன்னாள் படைத்தளபதி ரட்கோ ம்லாடிச் (Ratko Mladic) தனது 84வது வயதில் காலமானார். நெதர்லாந்தின்  Hague நகரிலுள்ள ஐ.நா சிறைச்சாலை வைத்தியசாலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். ஸ்ரெப்ரெனிக்கா இனப்படுகொலை 1995- ஆம் ஆண்டு ஐ.நா-வால் ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’ என அறிவிக்கப்பட்ட ஸ்ரெப்ரெனிக்காவில் 8,000-க்கும் மேற்பட்ட போஸ்னிய முஸ்லிம்கள் மற்றும் சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இவரே பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டுள்ளார். […]

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் சோனல் தினுஷா Sonal Dinusha விளாசிய அபார சதத்தின் உதவியுடன் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. செய்தி விளையாட்டு

சோனல் தினுஷா அபார சதம்: தோல்வியிலிருந்து தப்பியது இலங்கை

  • August 27, 2026
  • 0 Comments

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் சோனல் தினுஷா Sonal Dinusha விளாசிய அபார சதத்தின் உதவியுடன் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி ‘ followed-on’ பெற்ற போதிலும், 2வது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்களின் சவால்களை முறியடித்து 5வது நாள் ஆட்டத்தின் இறுதியில் போட்டியை இலங்கை அணி வெற்றிகரமாக சமநிலையில் முடிவடைந்தது. தனது 5வது டெஸ்ட் போட்டியில் மட்டுமே […]

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை செய்தி

காணிகோரி யாழ்.தையிட்டியில் இன்றும் போராட்டம்

  • August 27, 2026
  • 0 Comments

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விகாரை அமைந்துள்ள பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை எவ்வித தாமதமுமின்றி உரிய காணி உரிமையாளர்களிடம் உடனடியாக மீள வழங்க வேண்டும் என வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தொடர்ச்சியாக இப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று புதன்கிழமை மாலையில் ஆரம்பித்த இந்தப் […]

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது. இலங்கை செய்தி

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா (photos)

  • August 27, 2026
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது. பிரதம குரு சிவஶ்ரீ பாலேந்திரா ஐயா தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, கடந்த 13ஆம் திகதி அதிகாலை 12.20 மணியளவில் பக்தர்கள் புடைசூழ கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற திருவிழாக்களின் உச்சமாக, இன்று காலை 8.30 மணிக்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், சந்நிதி வேலவன் காலை 9.40 மணியளவில் […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் ஜனாதிபதி அழைப்பு

  • August 27, 2026
  • 0 Comments

இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே அதிகளவிலான ஒற்றுமையும் கூட்டுறவும் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், பிராந்தியத்தின் பாதுகாப்பை அனைத்து முஸ்லிம் நாடுகளும் இணைந்து கூட்டுப் பொறுப்புடன் நிர்வகிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மேலும், பிற நாடுகளின் தலையீட்டிற்கு இடம் தராமல், தமது பகிரப்பட்ட நலன்களை அடிப்படையாகக் கொண்டே முஸ்லிம் நாடுகள் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். டெஹ்ரானில் நடைபெற்ற 40-வது சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே […]

நீதித்துறையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்றும், இந்த விடயத்தில் மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பக்கமே நிற்கின்றார்கள் என்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

நீதித்துறை மறுசீரமைப்பு தொடரும்: அரசு திட்டவட்டம்

  • August 27, 2026
  • 0 Comments

நீதித்துறையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்றும், இந்த விடயத்தில் மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பக்கமே நிற்கின்றார்கள் என்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நீதித்துறை மறுசீரமைப்பு உள்ளிட்ட முக்கிய மாற்றங்களை முன்னெடுப்பதற்காகவே தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் தங்களின் ஆணையை வழங்கினார்கள். அதன் ஒரு அங்கமாகவே 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது நீதித்துறையின் சுயாதீனத்திற்கு எவ்வாறு அச்சுறுத்தலாக அமையும் என்பது புரியவில்லை. நீதித்துறையை […]

நேபாளம் மற்றும் சீன ஆட்சிக்கு உட்பட்ட திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1,500 பேர் வரை இன்னமும் மாயமாகியுள்ளனர். இப் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உலகம் செய்தி

மீட்பு பணி தீவிரம்: 5,000 இற்கு மேற்பட்ட படையினர் களமிறக்கம்

  • August 27, 2026
  • 0 Comments

நேபாளம் மற்றும் சீன ஆட்சிக்கு உட்பட்ட திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1,500 பேர் வரை இன்னமும் மாயமாகியுள்ளனர். இப் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காணாமல் போனவர்களில் சுமார் 700 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலைப் பகுதிகள் நிறைந்த இந்த எல்லை மண்டலம், மலையேற்றப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் அதிகம் நடமாடும் பகுதியாகும். பாதிக்கப்பட்ட கரடுமுரடான மலைப் […]

நடிகர் ரஜினி நடித்துவரும் 'தர்மன்' திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயாவும் நடிக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. சிவாஜி படத்துக்கு பிறகு தற்போதே அவர் ரஜினியுடன் நடிக்கின்றார். செய்தி பொழுதுபோக்கு

19 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் ஸ்ரேயா

  • August 27, 2026
  • 0 Comments

நடிகர் ரஜினி நடித்துவரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயாவும் நடிக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. சிவாஜி படத்துக்கு பிறகு தற்போதே அவர் ரஜினியுடன் நடிக்கின்றார். திலீப்​கு​மார் இயக்​கத்​தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெ​யிலர் 2’ திரைப்படம் அக்​டோபர் மாதம் வெளி​யாக இருக்​கிறது. இந்தப்படத்​தின் முதல் பாடல் சமீபத்​தில் வெளியாகி வரவேற்பைப் பெற்​றது. அதில் நடிகை பூர்ணா நடனம் ஆடியிருந்தார். இப்​படத்​துக்கு பிறகு அஸ்​வத் மாரி​முத்து இயக்​கும் ‘தர்மன்’ படத்​தில் நடித்து வரு​கிறார். இதன் 3-ம் கட்ட படப்பிடிப்பு ஹைத​ரா​பாத்​தில் […]