இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் திருத்தம் செய்ய தயாரில்லை – சஜித் அணி திட்டவட்டம்

நம்பிக்கையில்லாப் பிரேரணையை வலுவிழக்கச் செய்வதற்கு நாம் தயாரில்லை. எனவே, முன்வைத்த பிரேரணையை மீளப்பெறமாட்டோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை வலுவிழக்கச் செய்வதற்கு நாம் தயாரில்லை. எனவே, முன்வைத்த பிரேரணையை மீளப்பெறமாட்டோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

“நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பது எதிரணிக்குரிய ஜனநாயக உரிமையாகும்.

சபாநாயகருக்கு எதிராக 50 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கையளித்தோம். எனினும், அதில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஆளுங்கட்சி கூறுகின்றது.

இதற்கு நாம் தயாரில்லை. நம்பிக்கையில்லாப் பிரேரணையை வலுவிழக்கச் செய்வதற்கு நாம் தயாரில்லை.

ஆனால், திருத்தப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கு ஆளுங்கட்சி திகதியை நிர்ணயித்துள்ளது. திருத்தப்பட்ட பிரேரணையைக் கையளிக்காமலேயே எவ்வாறு விவாதத்துக்கான திகதியை நிர்ணயிக்க முடியும்?

ஆளுங்கட்சியின் தேவைக்கேற்ப எம்மால் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது” என்றார் நளின் பண்டார.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை