இந்தியா செய்தி தமிழ்நாடு

பொதுவேட்பாளரா? சீமான் கூறுவது என்ன?

தன்னைப் பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பான பேச்சை தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகளும் கட்சியினருமே கிளப்பிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தன்னைப் பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பான பேச்சை தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகளும் கட்சியினருமே கிளப்பிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவரின் 119ஆவது ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு மரியாதை செலுத்திய பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தன்னைப் பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக திமுக, அதிமுக அல்லது நாம் தமிழர் கட்சி எவ்வித முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிவித்த சீமான், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவும் நாம் தமிழர் கட்சியும் தனித்துப் போட்டியிட்டபோது தன்னைப் பொது வேட்பாளராக ஏன் குறிப்பிடவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

தமது கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் பொதுமக்களுக்கான பொதுவேட்பாளர்களே எனக் குறிப்பிட்ட அவர், அரசியலைத் தேர்தல் போட்டியாகக் கருதாமல் அறப்போராகவே அணுகுவதாகத் தெரிவித்தார்.

மேலும், அம்பாசமுத்திரம் தொகுதியில் தனித்துப் போட்டியிடவுள்ளதாகவும், தன்னை ஒருமுறை சட்டமன்றத்துக்கு அனுப்பிப் பார்க்குமாறும் அவர் கூறினார். அந்தத் தொகுதியை மாநிலத்தின் தலைசிறந்த தொகுதியாக மாற்றுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசுப் பணியாளர் நியமனம் மற்றும் பத்திரப் பதிவுத்துறை தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் விமர்சித்த சீமான், மதுபானம் வாங்குவதற்குக் கூட முன்பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கிண்டலாகக் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி