குவாதமாலாவில் தாக்குதல்தாரிகள் அட்டகாசம் – 03 பொலிஸார் உயிரிழப்பு
குவாத்தமாலாவில் Guatemalan ஆயுதம் ஏந்தியவர்கள் முன்னெடுத்த தாக்குதலில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜகாபாவின் Zacapa கிழக்குப் பகுதியில் நேற்று இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாக்குதலை கண்டித்துள்ள ஜனாதிபதி பெர்னார்டோ அரேவாலோ Bernardo Arévalo பொறுப்பானவர்களை அடையாளம் காண உதவுமாறு பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை என்பதுடன் தாக்குதல்தாரிகளும் அடையாளம் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




