மக்களுக்கு ஒருபோதும் அநீதி இழைக்கமாட்டோம்: ஜனாதிபதி அநுர உறுதி
அரசாங்கம் மக்களுக்கு பாதகமான எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காது என்பதுடன், மக்களின் நலனுக்காக எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் திரும்பப் பெறத் தயாராக இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நீர்கொழும்பு அல் – ஹிலால் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (26) பிற்பகல் நடைபெற்ற 42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்நாட்டை வளர்ச்சியடைந்த, சிறந்த நாடாக கட்டியெழுப்புவதில் வேறு எந்த சக்தியையும் விட மக்கள் […]













