2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான தகுதிகாண் போட்டிகளின் விபரங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்டுள்ளது. செய்தி விளையாட்டு

128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: எந்தெந்த நாடுகளுக்கு வாய்ப்பு?

  • November 16, 2026
  • 0 Comments

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான தகுதிகாண் போட்டிகளின் விபரங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்டுள்ளது. 128 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக்கில் மீண்டும் இடம்பெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் தலா ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன. அனைத்து போட்டிகளும் 20க்கு 20 (T20) வடிவில் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் ஆசியா, ஐரோப்பா, ஓசியானியா மற்றும் ஆபிரிக்க பிராந்தியங்களின் […]

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதன் மூலம் பிரித்தானியா பெற்ற நன்மைகளை விட இழப்புகளே அதிகம் எனப் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரெக்ஸிட் ஒப்பந்தம் தோல்வி: மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமாகிறதா பிரித்தானியா?

  • November 16, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதன் மூலம் பிரித்தானியா பெற்ற நன்மைகளை விட இழப்புகளே அதிகம் எனப் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை நடைபெறும் லண்டன் லார்ட் மேயர் விருந்தில் உரையாற்றும்போது, பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால் வர்த்தக நிறுவனங்களுக்கு பல தடைகள் ஏற்பட்டதுடன், ‘கட்டுப்பாட்டை மீட்டெடுப்போம்’ என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் உணவு வர்த்தகம், எரிசக்தி மற்றும் இளைஞர்களின் […]

அணுவாயுதக் குறைப்புக்கு ஐ.நா. முழு ஆதரவு

  • November 16, 2026
  • 0 Comments

அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையில் இந்த வாரம் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டின் ஊடாக அணுவாயுதக் குறைப்பு தொடர்பான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டால், அவற்றுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் (ASEAN) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிலிப்பைன்ஸ் சென்றுள்ள அவர், திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். அணுவாயுதக் குறைப்பு திட்டமொன்று உருவாக்கப்பட்டால், அதில் ஐக்கிய நாடுகள் […]

தமிழ் தேசிய மூத்த அரசியல் தலைவரான மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நடைபெற்றன. இலங்கை செய்தி

கண்ணீர் குளமானது வல்வெட்டித்துறை: சிவாஜிலிங்கத்தின் உடல் தீயுடன் சங்கமம்

  • November 16, 2026
  • 0 Comments

தமிழ் தேசிய மூத்த அரசியல் தலைவரான மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நடைபெற்றன. “எங்களுக்கு இனி யாரய்யா இருக்கின்றார்கள், நீங்கள் முன்னுக்கு நிற்பீர்கள் என்ற துணிவுடன்தானே நாங்கள் போராட்டக் களங்களில் அணிவகுத்தோம். இனி யார் எமக்கு முன்னிற்கப் போகின்றார்கள்?” என்று இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்ட மக்கள் கதறியழுதனர். முன்னதாக அன்னாரது இல்லத்தில் […]

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (16) முற்பகல் நடைபெற்றது. இலங்கை செய்தி

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இலங்கையின் வியூகம் என்ன?

  • November 16, 2026
  • 0 Comments

தலவாக்கலை பாமஸ்டன் தமிழ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக தங்கவேலு சண்முகராஜா கடமையேற்பு நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தலவாக்கலை பாமஸ்டன் தமிழ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக தங்கவேலு சண்முகராஜா இன்று (16) உத்தியோகபூர்வமாகத் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்னர் நுவரெலியா புனித பரிசுத்த திரித்துவக் கல்லூரியில் பிரதி அதிபராகவும், நுவரெலியா வெஸ்ட்வாட்ஹோ தமிழ் வித்தியாலயத்தில் அதிபராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அதிபராகக் கடமையேற்ற தங்கவேலு சண்முகராஜாவைப் பாடசாலையின் முன்னாள் அதிபர் பெனடிக் எந்தனி, […]

பலாங்கொடை கஸ்ஸப்ப தேரரை நாளை (17) வரை திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும், நாளை மீளவும் அவரை மன்றில் முன்னிலைப்படுத்துமாறும் திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுடீன் இன்று திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார். இலங்கை செய்தி

கஸ்ஸப்ப தேரருக்கு நாளைவரை விளக்கமறியல்

  • November 16, 2026
  • 0 Comments

பலாங்கொடை கஸ்ஸப்ப தேரரை நாளை (17) வரை திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும், நாளை மீளவும் அவரை மன்றில் முன்னிலைப்படுத்துமாறும் திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுடீன் இன்று திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து நேற்று அழைத்து வரப்பட்டிருந்த கஸ்ஸப்ப தேரர், நேற்றிரவு திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தேரர் சில தினங்களுக்கு முன்னர் இந்த மன்றையும், […]

ஐரோப்பிய நாடான லத்வியாவின் Latvia உக்ரைன் ஆதரவு மத்தியவாதக் கட்சியான United List , தேசியவாத தேசியக் கூட்டணியுடன் (National Alliance) இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க இணக்கம் தெரிவித்துள்ளது. ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய நாடொன்றில் அரசியல் திருப்பம் – உக்ரைன் ஆதரவு பிரதமர் எடுத்துள்ள அதிரடி முடிவு

  • November 16, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடான லத்வியாவின் Latvia உக்ரைன் ஆதரவு மத்தியவாதக் கட்சியான United List , தேசியவாத தேசியக் கூட்டணியுடன் (National Alliance) இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க இணக்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வரலாற்று வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, இந்தக் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 1991ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதன் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில், ஐக்கிய பட்டியல் கட்சி அதிகூடிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இத்தேர்தலில் 35.3 […]

ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்து, அவை நிராகரிக்கப்பட்டவர்களை ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்புவதற்கான திட்டத்தை ஐந்து ஐரோப்பிய நாடுகள் அறிவிக்கவுள்ளன. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்த 5 ஐரோப்பிய நாடுகள் திட்டம்

  • November 16, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்து, அவை நிராகரிக்கப்பட்டவர்களை ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்புவதற்கான திட்டத்தை ஐந்து ஐரோப்பிய நாடுகள் அறிவிக்கவுள்ளன. ஜேர்மனி, ஆஸ்திரியா, கிரீஸ், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்குவதற்கான அனைத்து சட்டரீதியான வாய்ப்புகளும் முடிவடைந்த பின்னரும் நாடு திரும்பாத புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவில் அமைக்கப்படும் விசேட மையத்தில் தங்கவைத்து, அவர்களைத் தாய்நாடுகளுக்குத் திருப்பி அனுப்புவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஐரோப்பிய […]

தமிழ்த் தேசிய மூத்தி அரசியல்வாதி மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இலங்கை செய்தி

சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு வீரவணக்கம் செலுத்தினார் தொல். திருமாவளவன்

  • November 16, 2026
  • 0 Comments

தமிழ்த் தேசிய மூத்தி அரசியல்வாதி மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். வல்வெட்டித்துறையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு அவர் மலர்மாலை அணிவித்து தனது இறுதி அஞ்சலியைச் செலுத்தினார். இதன்போது சிவாஜிலிங்கத்தின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்தார்.அவர் அஞ்சலி உரையும் ஆற்றினார். தமிழகத்தில் ஆளுங்கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்காளியாக […]

இலங்கை பொலிஸாருக்கான புதிய சீருடை சாம்பல் நிறச் சட்டை மற்றும் நீல நிறக் காற்சட்டையைக் கொண்டதாக அமையலாம் என டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை செய்தி

காலனித்துவ கால காக்கி சீருடைக்கு விடைகொடுக்க தயாராகும் இலங்கை

  • November 16, 2026
  • 0 Comments

இலங்கை பொலிஸாருக்கான புதிய சீருடை சாம்பல் நிறச் சட்டை மற்றும் நீல நிறக் காற்சட்டையைக் கொண்டதாக அமையலாம் என டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கனடா பொலிஸார் அணியும் சீருடையை ஒத்த இந்த வடிவமைப்பு, புதிய சீருடைக்காகப் பரிசீலிக்கப்படும் பல்வேறு மாதிரிகளில் ஒன்றாக உள்ளதாக பொலிஸ் உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. புதிய சீருடையை 2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தபோது, நவீன தொழில்நுட்ப […]