இந்தியா

நேபாளத்திற்கு 1.62 பில்லியன் டொலர் பெறுமதியான பொருளாதார உதவி – இந்தியா அறிவிப்பு

நேபாளத்திற்கு 1.62 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பொருளாதார உதவியை வழங்கவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

நேபாள பிரதமர் பலேந்திர ஷாவை டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த உதவி தொகுப்பை அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மோடி, “நேபாளத்தின் புனரமைப்பு மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் அளிக்கும் வகையில், 24,000 கோடி (240 பில்லியன்) நேபாள ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி ஒத்துழைப்புத் திட்டத்தை இன்று நாங்கள் அறிவிக்கிறோம்,” என்றார்.

“பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் சீரமைக்கவும், புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், எதிர்காலப் பேரிடர்களைச் சமாளிக்கும் நேபாளத்தின் திறனை மேலும் வலுப்படுத்தவும் உதவுவதே எங்கள் அர்ப்பணிப்பாக இருக்கும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை “இயற்கைப் பேரிடர்கள் மற்றும் கடினமான நேரங்களில்” நேபாளத்திற்கு முதல் உதவி செய்பவராகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் இந்தியாவிற்கு ஷா நன்றி தெரிவித்தார்.

வரும் நாட்களில் நமது இரு நாடுகளின் பொருளாதார வளத்தில் பங்காளிகளாக இணைய, இந்திய முதலீட்டாளர்களை நேபாளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்,” என்றும் அவர் கூறியள்ளார்.

அத்துடன் நேபாளத்திற்கு வருகை  தருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மார்ச் மாதம் ஆட்சிக்கு வந்த பிறகு ஷா மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே