“இளைய புரட்சித் தலைவி” – அரசியலுக்கு வருகிறாரா த்ரிஷா?
நடிகை த்ரிஷாவின் பெயரில், திருநெல்வேலியில் புதிய பேரவை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேரவைக்கு இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிப்பை பேரவை ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் வெளியிட்டுள்ளார்.
மேலும் இன்று இந்த பேரவையின் இலட்சினை வெளியிடப்பட்டுள்ளதுடன், அதன் கீழ் பதவிக்காக அல்ல; தமிழக மக்களின் உரிமைக்காக’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
இது பலரையும் கவனிக்க வைத்துள்ளது. சமீபகாலமாக நடிகை த்ரிஷா, விஜயுடன் தொடர்புப் படுத்தி பேசப்பட்டு வந்த நிலையில் அவர் அரசியலில் களமிறங்கலாம் என்ற சந்தேகமும் எழுந்திருந்தது.
ஒருவேளை இந்த பேரவை அரசியலுக்கான அடித்தளமாக இருக்கலாம் எனவும் ஊகிக்கப்படுகிறது.




