ஐரோப்பா செய்தி

ஐரோப்பாவில் சைபர் தாக்குதல்: ஈரான் மறுப்பு

ஐரோப்பிய நாடுகளில் பல்பொருள் அங்காடிகளின் குளிர்சாதனப் பெட்டிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களுடன் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அந்நாடு மீண்டும் மறுத்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் பல்பொருள் அங்காடிகளின் குளிர்சாதனப் பெட்டிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களுடன் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அந்நாடு மீண்டும் மறுத்துள்ளது.

ஈரான் இத்தகைய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், அவை ஆதாரமற்ற பொய்ச் செய்திகள் எனவும் தெரிவித்துள்ளது.

“ஈரான் மீது சுமத்தப்படும் எந்தவொரு குற்றச்சாட்டும் புனையப்பட்ட செய்தியாகும். நாம் மேற்கொள்ள விரும்பும் அல்லது மேற்கொண்ட எந்த நடவடிக்கையையும் முழு துணிச்சலுடன் பகிரங்கமாக அறிவிப்போம்” என ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் பாகாயி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் குளிர்சாதனப் பெட்டிகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் ஈரானைக் குற்றம் சாட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியதுடன், இத்தகைய குற்றச்சாட்டுகள் ஒரு திட்டமிட்ட சதித்திட்டம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் பிரான்ஸில் பல்பொருள் அங்காடிகளின் குளிர்சாதனப் பெட்டிகளை இலக்காகக் கொண்டு இடம்பெற்ற சைபர் தாக்குதல் தொடர்பாக, ஈரான் தூதரை பிரான்ஸ் அழைத்து கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தது.

இந்தச் சம்பவம் நாட்டின் நலன்களுக்கும், பிரான்ஸ் மக்களின் பாதுகாப்புக்கும் எதிரான பாரிய தாக்குதல் என பிரான்ஸ் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இம்மாதத் தொடக்கத்தில் ஐரோப்பாவின் குறைந்தது ஒன்பது நாடுகளில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் உணவு வணிக நிறுவனங்கள் மீது சந்தேகத்திற்குரிய சைபர் தாக்குதல்களின் மற்றொரு அலை இடம்பெற்றுள்ளது.

இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி