மேற்கு கரையில் தீவிரமடையும் வன்முறை: இஸ்ரேல்மீது துருக்கி குற்றச்சாட்டு
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் பயங்கரவாதம் தீவிரமடைந்து வருவதாக துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்குகரை பகுதியில் பாலஸ்தீனர்கள்மீது இஸ்ரேல் ராணுவம் , ராணுவ நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. அப்பாவி மக்கள் கொல்லப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுவருகின்றன. இந்நிலையில் துருக்கி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில் செயற்படும் பயங்கரவாதக் குடியேற்றவாசிகளால் வெள்ளிக்கிழமை நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்தக் கொலைகள் “இஸ்ரேலின் தொடர்ச்சியான இனப்படுகொலைக் கொள்கையின்” […]













