இந்தியா செய்தி

பிரேசிலில் லூலா வெற்றி: மோடி வாழ்த்து – இணைந்து செயல்பட உறுதி

பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா–பிரேசில் இடையிலான மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா–பிரேசில் இடையிலான மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “எனது அன்பு நண்பர் ஜனாதிபதி லூலாவுக்கு அவரது குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றிக்காக இதயம் கனிந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பல்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், உலகளாவிய தெற்கு நாடுகளின் பொதுவான முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்லவும் இணைந்து செயல்படுவோம் என அவர் கூறியுள்ளார்.

“பல்வேறு துறைகளில் எங்களது ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்துவோம். மேலும், அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான, நிலையான உலகை உருவாக்கும் நோக்கில் செயல்படுவோம்” என்றும் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரும் லூலாவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், இந்த வெற்றி பிரேசிலின் உள்நாட்டு அரசியலைத் தாண்டி, குறிப்பாக பிரிக்ஸ் (BRICS) அமைப்பு மற்றும் உலக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

லூலாவின் தலைமைத்துவம், உலகளாவிய தெற்கு நாடுகளின் குரலை வலுப்படுத்துவதோடு, சர்வதேச வர்த்தகம் மற்றும் உலக நிர்வாகத்தில் பல்முனைத் தன்மையை முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி