இந்தியா இலங்கை செய்தி

இலங்கை, இந்திய கடற்படை கூட்டு பயிற்சி நாளை ஆரம்பம்

இலங்கை மற்றும் இந்தியக் கடற்படைகளுக்கு இடையில் ஆண்டு தோறும் நடத்தப்படும் இருதரப்பு கடற்படைப் பயிற்சியான SLINEX 2026- கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியக் கடற்படைகளுக்கு இடையில் ஆண்டு தோறும் நடத்தப்படும் இருதரப்பு கடற்படைப் பயிற்சியான SLINEX 2026- கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பமாகவுள்ளது.

இந்தியாவின் விசாகப்பட்டினத்தில், செப்ரெம்பர் 14ஆம் திகதி (நாளை) முதல் 18 ஆம் திகதி வரை- ஐந்து நாள்கள் இந்தக் கூட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக, இலங்கை கடற்படையின் எஸ்.எல்.என்.எஸ் சிந்துரால என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், கடந்த 11ஆம் திகதி
கொழும்பு துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

இரு கடற்படைகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் தொழில்முறை அறிவு மற்றும் நிபுணத்துவப் பரிமாற்றத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு, SLINEX கூட்டுப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை