இந்தியா உலகம் செய்தி

அடுத்த பிரிக்ஸ் மாநாடு சீனாவில்

டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் உரையாற்றிய சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், மத்திய கிழக்கு மோதலில் பிரிக்ஸ் கூட்டமைப்பு அமைதியை ஏற்படுத்தும் அமைப்பாக (Peacemaker) செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் உரையாற்றிய சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், மத்திய கிழக்கு மோதலில் பிரிக்ஸ் கூட்டமைப்பு அமைதியை ஏற்படுத்தும் அமைப்பாக (Peacemaker) செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தற்போதைய போர்ச் சூழல் “சர்வதேச சமூகத்தின் பொதுவான நலன்களுக்கு உகந்தது அல்ல” என்பதால், இந்த விவகாரத்தில் அமைதியை நிலைநாட்டும் வகையில் சீனா பிற பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் இணைந்து செயல்படும் என்றுஜனாதிபதி ஷி ஜின்பிங் கூறியதாகச் சீன அரசு ஊடகமான CCTV செய்தி வெளியிட்டுள்ளது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எதியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை பிரிக்ஸ் அமைப்பு உள்ளடக்கியுள்ளது.

அமெரிக்கா மற்றும் அதன் மேலைநாட்டு கூட்டாளிகளின் ஆதிக்கத்தில் உள்ள உலகப் பொருளாதார வரிசைக்கு சவால் விடுக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டு இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இதன் உறுப்பு நாடுகள் ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்கையும், உலகப் பொருளாதாரத்தில் நான்கில் ஒரு பங்கையும் கொண்டுள்ளன.

மேலும், தெற்குலக (Global South) நாடுகளின் முன்னணி அமைப்பாகவும், வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகளின் சுயசார்பிற்கு முன்மாதிரியாகவும் திகழும் பிரிக்ஸ் கூட்டமைப்பு, கண்டுபிடிப்புகளை மையமாகக் கொண்ட வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் எனச் சீனத் தலைவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், அடுத்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை சீனா ஏற்கும் என்றும், 19-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டை சீனா நடத்தும் என்றும் அவர் தெரிவித்ததாக CCTV செய்தி வெளியிட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி