ஐ.நாவில் நெதன்யாகு உரை: பல நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு
ஐ.நா. சபையில் வியாழக்கிழமை உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிராந்தியத்தில் தனது நாட்டின் நடவடிக்கைகளுக்கு பலமான ஆதரவைத் தெரிவித்தார். வரும் அக்டோபர் 27-ஆம் திகதிநடைபெறவுள்ள தேர்தலில் தனக்குத் தோல்வி ஏற்படக்கூடும் என்ற கணிப்புகளுக்கு மத்தியிலும், சர்வதேச அளவில் இஸ்ரேல் எதிர்கொண்டு வரும் தனிமைப்படுத்தலை எதிர்கொள்ளும் நோக்கிலும் அவர் உரையாற்றினார். அதேவேளையில், அவர் உரையாற்றத் தொடங்கியதும் பல நாடுகளின் பிரதிநிதிகள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். வரும் அக்டோபர் 27 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற நெதன்யாகு தீவிர […]













