உலகின் 178 நிறுவனங்களை குறிவைத்து சைபர் தாக்குதல்கள் – பெருமளவு பணம் கொள்ளை
உலகின் மிக முக்கியமான நிறுவனங்களின் இணையத்தளங்கள் சைபர் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக Zoom, CNN, BBC, HSBC, Equifax, Salesforce, Peacock, IKEA, Fox News, NPR, ASPCA மற்றும் Invisalign உள்ளிட்ட 178 நிறுவனங்களின் இணையத்தளங்கள் சைபர் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன.
இந்தத் தாக்குதல், நிறுவனங்கள் வெவ்வேறு இணையதள வடிவமைப்புகளையும் அம்சங்களையும் சோதிக்கப் பயன்படுத்தும் ஒரு சேவையான Optimizely-ஐக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கிரிப்டோகரன்சி கொடுப்பனவுகளைத் திருடுவதற்கும், குறிப்பிட்ட ஆன்லைன் படிவங்களில் உள்ளிடப்பட்ட கடன் அட்டை விவரங்களைக் கைப்பற்றுவதற்கும், பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ள ஐபோன்கள் மற்றும் ஐபேடுகளை ஹேக் செய்வதற்கும் குற்றவாளிகள் முயற்சித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பணப்பைகளுக்கு இதுவரை 7,000 டொலர்களுக்கும் அதிகமான கிரிப்டோகரன்சி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய மைக்ரோசாஃப்ட் செயலிழப்பு மற்றும் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய விமான சேவைகள் நிறுத்தப்பட்டது உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான இடையூறுகளைத் தொடர்ந்து இந்த இணையவழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.




