இலங்கை செய்தி

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் கொலை: மாங்குளத்தில் கொடூரம்

முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் மீது இனந்தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் மீது இனந்தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பனிக்கன்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை 2 மணியளவில் தந்தை, தாய் மற்றும் மகள் ஆகிய மூவரும் உறங்கிக்கொண்டிருந்த வேளையில், திடீரென வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் தந்தை மற்றும் தாய் மீதும் தலையில் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தாய் மற்றும் தந்தை தாக்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகள் கூக்குரலிட்டதை அடுத்து, சத்தம் கேட்டு அயலவர்கள் உடனடியாக ஓடிச்சென்றுள்ளனர்.

அயலவர்களின் உதவியுடன் படுகாயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு உடனடியாக மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் சிகிச்சையின்போதும் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவத்துக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் யார் என்பது இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், தடயவியல் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர்களின் சடலங்கள் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை