இந்திய தலைமை தேர்தல் ஆணையாருக்கு எதிராக பதவி நீக்க பிரேரணை
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமாருக்கு (Gyanesh Kumar) எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பதவிநீக்கத் (Impeachment)பிரேரணையை வழங்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் காங்கிரஸ் கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் சிறப்பு திருத்த நடவடிக்கை (SIR – Special Intensive Revision) தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள தீவிர குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவரைப் பதவிநீக்கம் செய்ய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 324(5)-இன் படி பிரேரணையை இரு அவைகளிலும் முறையான பதவிநீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது




