வெனிசுலாவில் தேர்தல் நடத்தப்படும்: இடைக்கால ஜனாதிபதி உறுதி
வெனிசுலாவில் முழுமையான ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் மாற்றத்தின் ஒரு பகுதியாக பொதுத் தேர்தல் நடத்தப்படும் அந்நாட்டின் என்று இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) புதன்கிழமை ஐ.நா. பொதுச்சபையில் தெரிவித்தார்.
எனினும், தேர்தல் நடைபெறும் திகதி விபரத்தை அவர் வெளியிடவில்லை.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் அப்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெல்சி ரோட்ரிக்ஸ் அதிகாரத்திற்கு வந்தார்.
“இந்த பொதுச்சபையில் நான் மிகத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்: வெனிசுவேலாவில் நிச்சயம் தேர்தல்கள் நடைபெறும்” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
அரசாங்கம் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாகவும், அனைத்து அரசியல் சக்திகளின் பங்கேற்பையும் உறுதி செய்யும் என்றும் ரோட்ரிக்ஸ் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் நடைமுறைகளுக்காக தேசிய நிறுவனங்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
“வெனிசுலா தனது மறுபிறப்பிற்காக ஜனநாயக மாற்றத்தின் ஒரு செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது. அனைவருக்குமான சுதந்திரமான, வளமான மற்றும் ஒருங்கிணைந்த ஒரு நாட்டை உருவாக்க இந்த ஒழுங்கமைக்கப்பட்ட, நிறுவன ரீதியான மற்றும் சரிபார்க்கக்கூடிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.




