உலகம் செய்தி

ஹோர்முஸ் நீரிணைப் பாதுகாப்பு குறித்து ஈரான் – ஓமான் அவசரப் பேச்சுவார்த்தை

மத்திய கிழக்கில் போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக ஈரான் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக ஈரான் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஓமானுக்கு விஜயம் செய்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துதல், கடல்வழிப் பாதைகளின் பாதுகாப்பு மற்றும் இராணுவ மோதல்கள் மேலும் தீவிரமடைவதைத் தடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கைக் கையாளும் ஹோர்முஸ் நீரிணை, தற்போது ஈரானின் நடவடிக்கைகளால் பெருமளவில் முடங்கியுள்ளது.

இதேவேளை, சுமார் ஒன்பது மாதங்களாகத் தொடர்ந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக கட்டார் மற்றும் ஈரான் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

மறுபுறம், பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ ரேடார் கட்டமைப்பை இலக்குவைத்து ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை என்றும் பஹ்ரைன் அறிவித்துள்ளது.

மேலும், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் எண்ணெய்க் கப்பல்கள் மற்றும் எரிவாயுக் கப்பல் ஒன்று தீப்பற்றியதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையும் கடற்படையும் தெரிவித்துள்ளன. இந்தத் தகவல்களை ரொய்ட்டர்ஸ் சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில், கடல்வழிப் போக்குவரத்து மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதுடன், பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி