இந்திய தேர்தல் ஆணையாளர் பதவி விலக 48 மணிநேரம் காலக்கெடு
இந்தியாவின் தற்போதைய தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமாரை
நாட்டின் மிகப் பெரிய தேசவிரோதி என குற்றம்சாட்டியுள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சி CJP , அவர் 48 மணி நேரத்துக்குள் பதவி விலக வேண்டும் என்று கெடு விதித்துள்ளது.
மேலும், அவர் பதவி விலகாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் மற்றும் காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கப்படும் என்று CJP எச்சரித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் நடைமுறைகள் மற்றும் சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறை தொடர்பான முடிவுகள் மற்றும் உத்தரவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் 10 மாதங்களில் குறைந்தது 14 முறை ஆட்சேபனைகளைத் தெரிவித்ததாக வெளியான செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவன ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர் ஆசுதோஷ் ரங்கா ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அபிஜீத் தீப்கே, “தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மிகப் பெரிய தேசவிரோதி. இந்திய ஜனநாயகத்துக்கு அவர் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளார். எனவே, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்” என தெரிவித்தார்.




