தனது இறுதி மூச்சு வரை மக்களுக்குச் சேவையாற்றுவேன் என இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி

எனது இறுதி மூச்சு வரை மக்களுக்குச் சேவையாற்றுவேன்”: பிரதமர் மோடி

  • October 30, 2026
  • 0 Comments

தனது இறுதி மூச்சு வரை மக்களுக்குச் சேவையாற்றுவேன் என இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், 14,000 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்ததுடன், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதன்போது தனது 25 ஆண்டுகால பொது வாழ்க்கைப் பயணம் குறித்துப் பேசிய மோடி, 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி முதன்முதலாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாகவும், அன்றிலிருந்து மக்களின் […]

நம்பிக்கையில்லாப் பிரேரணையை வலுவிழக்கச் செய்வதற்கு நாம் தயாரில்லை. எனவே, முன்வைத்த பிரேரணையை மீளப்பெறமாட்டோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் திருத்தம் செய்ய தயாரில்லை – சஜித் அணி திட்டவட்டம்

  • October 30, 2026
  • 0 Comments

நம்பிக்கையில்லாப் பிரேரணையை வலுவிழக்கச் செய்வதற்கு நாம் தயாரில்லை. எனவே, முன்வைத்த பிரேரணையை மீளப்பெறமாட்டோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பது எதிரணிக்குரிய ஜனநாயக உரிமையாகும். சபாநாயகருக்கு எதிராக 50 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கையளித்தோம். எனினும், அதில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஆளுங்கட்சி கூறுகின்றது. இதற்கு நாம் தயாரில்லை. நம்பிக்கையில்லாப் பிரேரணையை வலுவிழக்கச் செய்வதற்கு […]

பாலஸ்தீன ஆதரவு நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக பிரித்தானியா செல்லவிருந்த சுவீடன் கல்வியாளரும் காலநிலை ஆய்வாளருமான அன்ட்ரியாஸ் மல்முக்கு (Andreas Malm) அந்நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா செய்தி

பாலஸ்தீன ஆதரவு நிகழ்வு: சுவீடன் கல்வியாளருக்கு பிரித்தானியாவுக்குள் நுழையத் தடை

  • October 30, 2026
  • 0 Comments

பாலஸ்தீன ஆதரவு நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக பிரித்தானியா செல்லவிருந்த சுவீடன் கல்வியாளரும் காலநிலை ஆய்வாளருமான அன்ட்ரியாஸ் மல்முக்கு (Andreas Malm) அந்நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்குள் அவரது பிரசன்னம் “பொதுநலனுக்கு உகந்ததல்ல” எனக் குறிப்பிட்டு, அவரது மின்னணு பயண அனுமதியை (ETA) அந்நாட்டு உள்துறை அமைச்சு இரத்துச் செய்துள்ளது. கடந்த புதன்கிழமை இந்த முடிவு தொடர்பான மின்னஞ்சல் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. லண்டனில் பிரித்தானிய சோசலிச இதழான Tribune ஏற்பாடு செய்துள்ள கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்பதற்கு ஒரு […]

சுதந்திர வர்த்தகம் மற்றும் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச வர்த்தக ஒழுங்கு நெருக்கடிக்கு உள்ளாகி வரும் நிலையில், அதற்கான சிறந்த மாற்றுத் தீர்வுகளை உருவாக்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் தலைமைப் பங்காற்றும் என ஜெர்மன் ஜனாதிபதி பிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

நெருக்கடிக்குள் உலக வர்த்தக ஒழுங்கு; மாற்றுத் தீர்வுடன் ஐரோப்பிய ஒன்றியம்

  • October 30, 2026
  • 0 Comments

சுதந்திர வர்த்தகம் மற்றும் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச வர்த்தக ஒழுங்கு நெருக்கடிக்கு உள்ளாகி வரும் நிலையில், அதற்கான சிறந்த மாற்றுத் தீர்வுகளை உருவாக்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் தலைமைப் பங்காற்றும் என ஜெர்மன் ஜனாதிபதி பிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார். தென்கொரிய தலைநகர் சியோலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆசிய–பசிபிக் ஜெர்மன் வர்த்தக மாநாட்டில் உரையாற்றிய அவர், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களுக்கு அப்பாற்பட்ட வாய்ப்புகளை நாடுகளுக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். சர்வதேச வர்த்தகத்தின் ஊடாகவே பல நாடுகள் செழிப்படைந்துள்ளன. […]

வடகொரியாவின் எல்லை அத்துமீறல்களுக்கு எதிராக, நாட்டின் இராணுவ எல்லையைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தென்கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வீ சுங்-லாக் தெரிவித்துள்ளார். செய்தி

வடகொரியாவின் அத்துமீறல்களுக்கு உறுதியான பதிலடி: தென்கொரியா எச்சரிக்கை

  • October 30, 2026
  • 0 Comments

வடகொரியாவின் எல்லை அத்துமீறல்களுக்கு எதிராக, நாட்டின் இராணுவ எல்லையைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தென்கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வீ சுங்-லாக் தெரிவித்துள்ளார். வடகொரியா தனது எல்லைப் பகுதியில் மட்டுமே நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகக் கூறினாலும், எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான செயற்பாடுகளுக்கு தென்கொரியா உறுதியான பதிலளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் இரு கொரியாக்களுக்கும் இடையிலான இராணுவமயமற்ற வலயத்தில் (DMZ) இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில், கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தென்கொரிய இராணுவத்தினர் […]

யாழ்ப்பாணம், செம்மணி கூட்டுப் புதைகுழி குறித்து சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணையை உறுதிப்படுத்த சர்வதேச உதவியைப் பெற வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: சுயாதீன விசாரணைக்கு சர்வதேச உதவி அவசியம்

  • October 30, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி கூட்டுப் புதைகுழி குறித்து சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணையை உறுதிப்படுத்த சர்வதேச உதவியைப் பெற வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா, நீதியை உறுதிப்படுத்தவும் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகள் குறித்து சிறிலங்கா அரசாங்கத்திற்குப் பரிந்துரைகளை வழங்க முடியும். ஆனால் அந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்தையே சாரும். இது போன்ற விவகாரங்களில் உள்ள […]

டெல்லியில் எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட அரசியல் பேரணியை ஒத்திவைக்குமாறு, காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தியிடம் டெல்லி வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

ராகுல் காந்தியின் பேரணிக்கு வர்த்தகர்கள் எதிர்ப்பு; ஒத்திவைக்குமாறு சோனியாவிடம் கோரிக்கை

  • October 30, 2026
  • 0 Comments

டெல்லியில் எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட அரசியல் பேரணியை ஒத்திவைக்குமாறு, காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தியிடம் டெல்லி வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பேரணி காரணமாக டெல்லியின் முக்கியமான 20 வர்த்தகச் சந்தைகளில் நாளொன்றுக்கு நடைபெறும் 10,000 முதல் 12,000 கோடி இந்திய ரூபா வரையிலான வர்த்தகம் பாதிக்கப்படக்கூடும் என வர்த்தகர்கள் எச்சரித்துள்ளனர். டெல்லியின் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் (Chamber of Trade and Industry – […]

latestnews,breakingnews,srilankanews,news update,lka,cricketnews, sportsnews,T20worldcup,politicalnews,cinemanews,indiannews,india,tamilnaadu, இந்தியா செய்தி

வறுமை ஒழிப்பில் இந்தியா முன்னேற்றம் – உலக வங்கி தகவல்

  • October 30, 2026
  • 0 Comments

இந்தியாவில் தீவிர வறுமை விகிதம் கடந்த 2011ஆம் ஆண்டில் 27.1 சதவீதமாகக் காணப்பட்ட நிலையில், 2023ஆம் ஆண்டில் அது 2.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலகின் மிக வேகமாக வறுமையைக் குறைத்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகத் திகழ்வதாக உலக வங்கியின் 2026 ஒக்டோபர் மாத வறுமை மற்றும் சமத்துவ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலக வங்கியின் அறிக்கையின்படி, நாளொன்றுக்கு 3 அமெரிக்க டொலருக்கும் குறைவான வருமானத்தில் வாழும் மக்களின் விகிதமே தீவிர வறுமைக்கான அளவுகோலாகக் கணக்கிடப்படுகிறது. […]

ஆஸ்திரேலியாவில் விஷக் காளான்கள் கலந்த உணவை வழங்கி, பிரிந்துவாழ்ந்த தனது கணவரின் குடும்பத்தைச் சேர்ந்த மூவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற பெண்ணொருவர், தனது தண்டனைக்கு எதிராகத் தாக்கல் செய்த மேன்முறையீட்டில் தோல்வியடைந்துள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

‘மரண விருந்தை’ ஏற்பாடு செய்த பெண் தாக்கல் செய்த மேன்முறையீடு நிராகரிப்பு

  • October 30, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் விஷக் காளான்கள் கலந்த உணவை வழங்கி, பிரிந்துவாழ்ந்த தனது கணவரின் குடும்பத்தைச் சேர்ந்த மூவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற பெண்ணொருவர், தனது தண்டனைக்கு எதிராகத் தாக்கல் செய்த மேன்முறையீட்டில் தோல்வியடைந்துள்ளார். அத்துடன், அவருக்கு வழங்கப்பட்டிருந்தபிணையில் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 51 வயதான எரின் பேட்டர்சன் (Erin Patterson) என்பவர், கடந்த ஆண்டு தனது மாமனார், மாமியார் மற்றும் மாமியாரின் சகோதரி ஆகிய மூவரையும் விஷக் காளான்கள் கலந்த உணவை […]

ஞானசார தேரரை விடுவிப்பதற்கான போராட்டத்தில் இருந்து நாம் பின்வாங்கவில்லை. எமது போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்று உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்தார். இலங்கை செய்தி

போராட்டம் ஓயவில்லை – பிக்குகள் எச்சரிக்கை

  • October 30, 2026
  • 0 Comments

ஞானசார தேரரை விடுவிப்பதற்கான போராட்டத்தில் இருந்து நாம் பின்வாங்கவில்லை. எமது போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்று உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “விகாரமகாதேவி பூங்காவிலிருந்து நாம் வெளியேறிவிட்டோம் என்பதற்காக எமது போராட்டம் முடிவடைந்துவிடவில்லை. ஞானசார தேரருக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பதற்கான போராட்டத்தைக் கைவிடவில்லை. அந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்தி, மக்களின் மனநிலை என்ன என்பதை இந்த அரசாங்கம் அறிந்துகொள்ள […]