இறுதிச்சடங்கில் பங்கேற்று வீடு திரும்பிய குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
இறுதிச் சடங்கு நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு, நேற்றிரவு (30) டு திரும்பிக்கொண்டிருந்த நபரொருவர், கெசெல்கமு ஓயாவுக்குச் செல்லும் நீரோடை கால்வாயிலிருந்து இன்று (31) சடலம் மீட்கப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், பொகவந்தலாவை செப்பல்டன் தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான நாகராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (30) இரவு, பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோரா தோட்டத்தில் இடம்பெற்ற உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட பின்னர், நடந்தே […]













