இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் பயணத்துக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்துள்ளது உலகம் செய்தி

முடிவுக்கு வருகிறது இஸ்லேல் பிரதமரின் அரசியல்: அதிர்ச்சி தரும் கருத்து கணிப்பு

  • June 20, 2026
  • 0 Comments

இஸ்ரேலில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் விரும்புவது தெரியவந்துள்ளது. சுமார் 59 சதவீத மக்கள் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற கருத்தை முன்வைத்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக 33 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். நெதன்யாகுவிற்குப் பிறகு லிகுட் கட்சியை வழிநடத்தக்கூடிய தலைவர்களாக நிர் பர்கத் மற்றும் யாரிவ் லெவின் போன்ற முக்கிய அமைச்சர்களை […]

யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று பார்வையிட்டார் இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: உள்ளக விசாரணையே போதும் என்கிறார் நீதி அமைச்சர்

  • June 20, 2026
  • 0 Comments

செம்மணி, மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை விரைவாக முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவது அரசாங்கத்தின் கடமையாகும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை நேற்று மாலை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். செம்மணி அகழ்வுப் பணிகளுக்கு சர்வதேச நிபுணர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன […]

ஈரானில் இருந்து போதைப்பொருள் இறக்குமதி செய்த ஆஸ்திரேலிய தம்பதியினர் கைது ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஈரானில் இருந்து போதைப்பொருள் இறக்குமதி- ஆஸ்திரேலிய தம்பதியினர் கைது

  • June 20, 2026
  • 0 Comments

ஈரானில் இருந்து சுமார் 12 மில்லியன் டாலர் மதிப்பிலான ஐஸ் போதைப்பொருளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ய முயன்ற சிட்னியைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஒரு கப்பல் கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 கிலோ போதைப்பொருளை ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டது. காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பிக்க இவர்கள் போலி முகவரிகளைப் பயன்படுத்தியதுடன், சரக்குகளைப் பெறும் இடங்களையும் பலமுறை மாற்றியுள்ளனர். இறுதியில் ஆஸ்திரேலிய […]

பராகுவேயின் மதியாஸ் கலார்சா வெற்றி கோலை அடித்ததைக் கொண்டாடுகிறார். செய்தி விளையாட்டு

துருக்கியை வெளியேற்றியது பராகுவே:புதிய விதியின்கீழ் முதலாவது சிவப்பு அட்டை

  • June 20, 2026
  • 0 Comments

முதல் பாதியிலேயே முன்னணி வீரர் வெளி யேற்றப்பட்ட போதிலும், பராகுவே அணி தனது அசாத்தியமான தடுப்பாட்டத்தின் மூலம் துருக்கியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றியுள்ளது. இப்போட்டியில் அடிக்கப்பட்ட ஆட்டத்தின் அதிவேக கோலே இரு அணிகளுக்குமான வெற்றி-தோல்வியைத் தீர்மானித்தது. அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் 4-1 என படுதோல்வி அடைந்திருந்த பராகுவே , நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடந்த போட்டியில் ஆக்ரோஷமாக களம் இறங்கியது. ஆட்டம் தொடங்கிய 64-வது வினாடியிலேயே பராகுவேயின் மத்தியாஸ் […]

தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜே.வி.பியிலும், பிரதமர் ஹரினி அமரசூரிய தேசிய மக்கள் சக்தியிலும் இருக்கின்றனர். அரசியல் இலங்கை செய்தி

ஜனாதிபதி, பிரதமருக்கிடையில் பனிப்போர்?

  • June 20, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், தனக்கும் இடையில் பனிப்போர் நிலவுவதாக வெளியாகும் தகவல்களை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அடியோடு நிராகரித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு நிராகரித்தார். இது தொடர்பில் பிரதமர் மேலும் கூறியவை வருமாறு , “ தேசிய மக்கள் சக்திக்கும், ஜே.வி.பிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக கதைகள் கூறப்பட்டுவருகின்றன. இது எதிரணிகளின் எதிர்பார்ப்பாகும். ஆனால் உண்மை அதுவல்ல. தேசிய மக்கள் சக்தியாக நாம் ஒற்றுமையாக செயல்பட்டுவருகின்றோம். தேசிய […]

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின், 29ஆம் நாள் அகழ்வு பணி நேற்று இடம்பெற்றது. இலங்கை செய்தி

செம்மணியில் 370 எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுப்பு

  • June 20, 2026
  • 0 Comments

செம்மணி, சித்துப்பாத்தி, மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மேலும் 03 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின், 29ஆம் நாள் அகழ்வு பணி நேற்று இடம்பெற்றது. இந்த அகழ்வின் போது, 3 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், புதிதாக 07 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. இதையடுத்து, அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 394 ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் 370 எலும்புக் கூடுகள் இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

போட்டிக்குப் பிறகு மொராக்கோவின் இஸ்மாயில் சைபாரி கொண்டாடுகிறார். செய்தி விளையாட்டு

ஸ்காட்லாந்து அணிக்கு ஏமாற்றத்தை தந்த போட்டி

  • June 20, 2026
  • 0 Comments

2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மொராக்கோ அணி , ஸ்காட்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு (Knockout Round) முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் மைதானத்தில் 64,000-க்கும் அதிகமான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இப்போட்டியில், ஆட்டம் தொடங்கிய ஒரு நிமிடத்திற்குள்ளேயே மொராக்கோ அணி முன்னிலை பெற்றது. ரியல் மாட்ரிட் நட்சத்திரம் பிராஹிம் டயஸ் (Brahim Diaz) தூக்கிக் கொடுத்த பந்தை, 25 வயதான இஸ்மாயில் சைபாரி மிக நேர்த்தியாகக் கட்டுப்படுத்தி […]

2026 உலகக் கோப்பை குரூப் C கால்பந்துப் போட்டியின் போது பிரேசிலின் முன்கள வீரர் மேதியஸ் குன்ஹா தனது அணியின் இரண்டாவது கோலை அடித்ததைக் கொண்டாடுகிறார் செய்தி விளையாட்டு

பிரேசில் அபார வெற்றி – வெளியேறியது ஹைட்டி

  • June 20, 2026
  • 0 Comments

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹைட்டியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் நட்சத்திரமான மேதியூ குன்ஹா இரண்டு கோல்களை அடித்து தனது திறமையை நிரூபித்ததோடு, வினிசியஸ் ஜூனியர் ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இந்தத் தோல்வியின் மூலம் ஹைட்டி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது. பிலடெல்பியா மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாகத் தங்கள் அணிகளை ஆதரித்த நிலையில், […]

ஆப்பிரிக்கர்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் தென்னாப்பிரிக்காவின் சிரில் ரமபோசாவை நேருக்கு நேர் சந்தித்தார். aappirikkargal thunpuruththappaduvathaagak koorappatta உலகம் செய்தி

தென்னாபிரிக்காவுக்கான நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்கா

  • June 20, 2026
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில் HIV பரவலைத் தடுப்பதற்காக வழங்கி வந்த நிதி உதவிகளை நிறுத்தப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உலகிலேயே மிக அதிகமாக, சுமார் 80 லட்சத்திற்கும் (8 Million) அதிகமான எச்.ஐ.வி HIV பாதிப்புள்ள மக்கள் வாழும் நாடு தென்னாப்பிரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவில் வாழும் சிறுபான்மை வெள்ளை இனத்தவரான ‘ஆப்பிரிக்கானர்’ (Afrikaner) சமூகத்தினரைப் பாதுகாக்க அந்நாட்டு அரசு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டின் பின்னணியிலேயே, நிதி நிறுத்த முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த […]

ஆயமநசகநைடன இடைத்தேர்தலில் Andy Burnham அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரித்தானிய பிரதமரின் தலைமைப் பதவிக்கு கட்சிக்குள் பலத்த சவால் எழுந்துள்ளது. ஐரோப்பா கல்வி மத்திய கிழக்கு

பிரித்தானிய பிரதமரின் ‘தலை’ குறிவைப்பு

  • June 20, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் Sir Keir Starmer பதவி விலகுவதற்கான காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் என கட்சிக்குள்ளேயே கோரிக்கைகள் வலுக்க தொடங்கியுள்ளன. Makerfield இடைத்தேர்தலில் Andy Burnham அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த வெற்றி, லேபர் கட்சிக்குள் (Labour Party) புதிய தலைமைக்கான போட்டியை உக்கிரமடைய வைத்துள்ளது. குழப்பம், பிளவு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், ஆண்டி பர்ன்ஹாமிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான திட்டங்களை பிரதமர் அறிவிக்க வேண்டும் என லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் […]