ஆஸ்திரேலியா செய்தி பொழுதுபோக்கு

ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நட்சத்திரம் டெய்லா மீத் 30 வயதில் காலமானார்

ஆஸ்திரேலியாவின் பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான டெய்லா மீத் Tayla Meath (30), கடுமையான புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார்.

ஆஸ்திரேலியாவின் பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான டெய்லா மீத் Tayla Meath (30), கடுமையான புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார்.

ஆதரவற்ற நாய்களுக்குப் மறுவாழ்வு அளித்து, அவற்றுக்கு புதிய வீடுகளைக் கண்டறிய உதவும் ‘தி டாக் ஹவுஸ் ஆஸ்திரேலியா’ (The Dog House Australia) என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்பட்டவர்.

அவரது மறைவை உறுதிசெய்து அஞ்சலிச் செய்தி வெளியிட்டுள்ள அந்நிகழ்ச்சி நிர்வாகம், விலங்குகள் மீது அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் உருக்கமாக நினைவுகூர்ந்துள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீண்ட மற்றும் கடுமையான புற்றுநோய் போராட்டத்திற்குப் பிறகு டெய்லா மறைந்த செய்தி எங்களை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.

‘தி டாக் ஹவுஸ் ஆஸ்திரேலியா’ நிகழ்ச்சியின் மூலம் நமது நான்கு கால் நண்பர்கள் மீது அவர் காட்டிய அபார அன்பு, கருணை மற்றும் பராமரிப்பிற்காகவும், அவரைத் தெரிந்த ஒவ்வொருவர் மனதிலும் அவர் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கத்திற்காகவும் அவர் என்றும் நினைவுகூரப்படுவார்.

இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது அன்பிற்குரிய அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு, தனது 27-வது வயதில் டெய்லாவிற்கு ‘அடினாய்டு சிஸ்டிக் கார்சினோமா’ (Adenoid cystic carcinoma) என்ற அரிதான புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்த ஆண்டில், அவரது கல்லீரலில் புற்றுநோய் வளர்ச்சி அதிகரித்து பித்த நாளங்களில் பல தடைகளை ஏற்படுத்தியதால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

மருத்துவ சிகிச்சைகள் அனைத்தும் பலனளிக்காத நிலையில், தனது கடைசி நாட்களை அன்புக்குரியவர்களுடன் கழிப்பதற்காக டெய்லா வீட்டிற்குத் திரும்பினார்.

இந்நிலையில், செப்டம்பர் 1 அன்று குடும்பத்தினரின் முன்னிலையில் அவரது உயிர் பிரிந்தது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி