செய்தி விளையாட்டு

பிரேசில் அபார வெற்றி – வெளியேறியது ஹைட்டி

2026 உலகக் கோப்பை குரூப் C கால்பந்துப் போட்டியின் போது பிரேசிலின் முன்கள வீரர் மேதியஸ் குன்ஹா தனது அணியின் இரண்டாவது கோலை அடித்ததைக் கொண்டாடுகிறார்

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹைட்டியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

மான்செஸ்டர் யுனைடெட் நட்சத்திரமான மேதியூ குன்ஹா இரண்டு கோல்களை அடித்து தனது திறமையை நிரூபித்ததோடு, வினிசியஸ் ஜூனியர் ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

இந்தத் தோல்வியின் மூலம் ஹைட்டி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

பிலடெல்பியா மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாகத் தங்கள் அணிகளை ஆதரித்த நிலையில், நெய்மர் காயத்தினால் இந்தப் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் அணி தனது அடுத்த சுற்றில் ஸ்காட்லாந்தை எதிர்கொள்ளத் தயாராகி வரும் வேளையில், இந்த வெற்றி அந்த அணியின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி