தென்னாபிரிக்காவுக்கான நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்கா
தென்னாப்பிரிக்காவில் HIV பரவலைத் தடுப்பதற்காக வழங்கி வந்த நிதி உதவிகளை நிறுத்தப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
உலகிலேயே மிக அதிகமாக, சுமார் 80 லட்சத்திற்கும் (8 Million) அதிகமான எச்.ஐ.வி HIV
பாதிப்புள்ள மக்கள் வாழும் நாடு தென்னாப்பிரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்காவில் வாழும் சிறுபான்மை வெள்ளை இனத்தவரான ‘ஆப்பிரிக்கானர்’ (Afrikaner) சமூகத்தினரைப் பாதுகாக்க அந்நாட்டு அரசு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டின் பின்னணியிலேயே, நிதி நிறுத்த முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த ஆப்பிரிக்கானர் ஒடுக்குமுறைக் குற்றச்சாட்டை தென்னாப்பிரிக்க அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த முடிவு குறித்து தங்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், தாங்கள் “சுயசார்புத் திட்டம்” (Self-reliance plan) ஒன்றில் ஏற்கனவே நீண்டகாலமாகப் பணியாற்றி வருவதாகத் தென்னாப்பிரிக்க சுகாதார அமைச்சு பதிலளித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பிற்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.




