செய்தி விளையாட்டு

ஸ்காட்லாந்து அணிக்கு ஏமாற்றத்தை தந்த போட்டி

போட்டிக்குப் பிறகு மொராக்கோவின் இஸ்மாயில் சைபாரி கொண்டாடுகிறார்.

2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மொராக்கோ அணி , ஸ்காட்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு (Knockout Round) முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் பாஸ்டன் மைதானத்தில் 64,000-க்கும் அதிகமான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இப்போட்டியில், ஆட்டம் தொடங்கிய ஒரு நிமிடத்திற்குள்ளேயே மொராக்கோ அணி முன்னிலை பெற்றது.

ரியல் மாட்ரிட் நட்சத்திரம் பிராஹிம் டயஸ் (Brahim Diaz) தூக்கிக் கொடுத்த பந்தை, 25 வயதான இஸ்மாயில் சைபாரி மிக நேர்த்தியாகக் கட்டுப்படுத்தி ஸ்காட்லாந்து கீப்பர் ஆங்கஸ் கன்னையும் தாண்டி கோல் போஸ்ட்டின் மேல் பகுதியில் அடித்து மிரட்டினார்.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் மொராக்கோ அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் நிலையில் உள்ளது.

கடந்த 2022 கத்தார் உலகக் கோப்பையில் அரையிறுதி வரை சென்று வரலாற்றுச் சாதனை படைத்த மொராக்கோ, இந்த முறையும் அதே போன்றதொரு பயணத்தைத் தொடரத் தயாராகி வருகிறது.

மறுபுறம், முதல் போட்டியில் ஹெய்தியை வீழ்த்தி நம்பிக்கையுடன் களம் இறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை லீக் சுற்றைத் தாண்டி அடுத்த சுற்றுக்கு முன்னேறியிராத ஸ்காட்லாந்து அணி, தனது அடுத்த போட்டியில் பலம் வாய்ந்த பிரேசில் அணியை எதிர்கொள்ள வேண்டும் என்பதால் அதன் அடுத்த சுற்று வாய்ப்பு தற்போது ஊசலாட்டத்தில் உள்ளது.

அடுத்ததாக புதன்கிழமை (ஜூன் 24) அன்று நடைபெறவுள்ள கடைசி லீக் போட்டிகளில், மொராக்கோ அணி அட்லாண்டாவில் ஹெய்தியையும், ஸ்காட்லாந்து அணி மியாமியில் பிரேசிலையும் எதிர்கொள்ள உள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி