தவெக சட்டமன்றக்குழு தலைவராக விஜய் தெரிவு!
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்றக்குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற தவெக எம்எல்ஏக்களை விஜய் இன்று சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது ஆட்சியமைப்பது தொடர்பிலும் ஆலோசனை நடந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து, அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். அதேவேளை, விஜய் […]













