ஐரோப்பா

இங்கிலாந்தில் குடியேற்ற எதிர்ப்பு பேரணி – போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

இங்கிலாந்து முழுவதும் இன்றைய தினம் குடியேற்ற எதிர்ப்பு பேரணிகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் போராட்டங்களில் கலந்துகொள்பவர்கள் முகக் கவசம் அணிவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

“தேசபக்தர்கள்” என்று அழைத்துக் கொள்ளும் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டம்  நண்பகலில், போர்ட்ஸ்மவுத்தில் Portsmouth ஆரம்பமாகும்.

“வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் குற்றச்செயல்களுக்கான வாய்ப்புகளைக் குறைப்பதற்காகவே” இந்த முகக்கவசத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

இதேவேளை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பும் போர்ட்ஸ்மவுத்தில் Portsmouth புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது பொலிஸாருக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அத்துடன் பொலிஸ் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்