இலங்கை

குழந்தைகளிடையே டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு – மருத்துவர்கள் எச்சரிக்கை

  • July 4, 2026
  • 0 Comments

குழந்தைகளிடையே டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட சில குழந்தைகள் நோயிலிருந்து குணமடைந்த பிறகும் கூட சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் (LRH) குழந்தை நல மருத்துவ ஆலோசகர் டாக்டர் தீபால் பெரேரா, அரிதான சந்தர்ப்பங்களில் டெங்கு மூளை பாதிப்பிற்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் கடுமையான தசை மற்றும் எலும்பு வலியை ஏற்படுத்தி, இதயத்தையும் பாதிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார். வழக்கமாக குணமடைய ஏழு முதல் […]

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன், தமிழ் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இலங்கை செய்தி தமிழ்நாடு

தமிழக எதிர்க்கட்சி தலைவருடன் தமிழ் தேசியப் பேரவையினர் சந்திப்பு

  • July 4, 2026
  • 0 Comments

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன், தமிழ் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இன்று காலை 10.00 மணியளவில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், செல்வராஜா கஜேந்திரன், பொன்னுத்துரை கங்கரநேசன், சட்டத்தரணி கே.வி. தவராசா, தர்மலிங்கம் சுரேஷ், சட்டத்தரணி சுகாஸ், சட்டத்தரணி நடராஜா காண்டீபன் உள்ளிட்ட தமிழ் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். இது தொடர்பாக கஜேந்திரகுமார் […]

உலகம்

கடும் வெப்பம் : நெரிசலான வாழ்கை – பாபா தீவின் அவல நிலை

  • July 4, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் தலைநகரமும் பெருநகரமுமான கராச்சியின் கடற்கரைக்கு அப்பால் அமைந்துள்ள பாபா தீவில் வெப்பநிலை உயர்வால் மக்கள் தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் ஒரு சதுரக் கிலோமீற்றர் பரப்பளவுக் கொண்ட குறித்த பகுதியில் 25000 பேர் வசிக்கின்றன். அந்த பகுதியில் வீடுகள் நெருக்கமாகக் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக கட்டப்பட்டுள்ளன. இதன்காரணமாக கடுமையான வெப்ப அலையில் அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு, அன்றாட அழுத்தங்கள் பெரும்பாலும் இன்னும் அதிகமாக உள்ளன. கோடை காலங்களில் 45°C-க்கும் அதிகமான வெப்பத்தை மக்கள் […]

Israeli forces raid Tubas, Aqqaba and Far’a camp in West Bank உலகம் செய்தி

பாலஸ்தீன அகதி முகாம்களுக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் படைகள்

  • July 4, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் (West Bank) துபாஸ் , அக்காபா மற்றும் பாரா ஆகிய நகரங்களில் உள்ள அகதி முகாம்களுக்குள் இஸ்ரேலியப் படைகள் அத்துமீறி நுழைந்து, சோதனை நடத்தியுள்ளன. இந்த மூன்று பகுதிகளிலும் உள்ள பல பாலஸ்தீனியர்களின் வீடுகளுக்குள் நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இஸ்ரேலிய ராணுவத்தினர், பின்னர் அங்கிருந்து பின்வாங்கினர். இச்சோதனைகளின் போது எவரும் கைது செய்யப்பட்டதாகத் தகவல் இல்லை. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை முழுவதும் இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே […]

முதலையைத் திருமணம் செய்த மெக்சிகோ நகர மேயர் உலகம் செய்தி

முதலையைத் திருமணம் செய்த மெக்சிகோ நகர மேயர்

  • July 4, 2026
  • 0 Comments

மெக்சிகோவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒக்ஸாகா (Oaxaca) மாகாணத்தின் சான் பருத்தி ஹுவாமெலுலா (San Pedro Huamelula) என்ற சிறிய கடலோர மீன்பிடி கிராமத்தின் மேயர் விக்டர் ஹியூகோ சோசா (Victor Hugo Sosa), பெண் முதலை ஒன்றை பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார். பாரம்பரிய இசை மற்றும் நடனங்களுடன் மிக விமரிசையாக நடைபெற்ற இந்தத் திருமண விழாவில், மணமகளான முதலையின் வாய்ப் பகுதி (கடிக்காமல் இருப்பதற்காக) கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேயர் அந்த […]

Harry Kane கடைசி நேரத்தில் அடித்த கோல்களால் இங்கிலாந்து அணி அதிர்ச்சித் தோல்வியிலிருந்து தப்பியது. செய்தி விளையாட்டு

இங்கிலாந்து அணிக்கு காத்திருக்கும் சவால்: Viagra யுக்தி கையாளப்படுமா?

  • July 4, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் (Round of 32) போட்டியில் காங்கோ குடியரசு அணிக்கு எதிராகக் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, தனது அடுத்தகட்ட சவாலை எதிர்கொள்ள ஒரு விசித்திரமான உத்தியைக் கையாள்வது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. Harry Kane கடைசி நேரத்தில் அடித்த கோல்களால் இங்கிலாந்து அணி அதிர்ச்சித் தோல்வியிலிருந்து தப்பியது. எனினும், ஞாயிற்றுக்கிழமை இரவு மெக்சிகோவில் உள்ள புகழ்பெற்ற அஸ்டெகா மைதானத்தில் (Azteca Stadium) நடைபெறவுள்ள அடுத்த சுற்றில், இங்கிலாந்து அணி […]

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மத்திய-வடக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள (Hawks Nest என்ற இடத்தில், வெள்ளிக்கிழமை Migratory bird ஒன்றிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட பரிசோதனையில் H5N1 பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் பரவும் பறவைக் காய்ச்சல் குறித்து பதற்றம் வேண்டாம்

  • July 4, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மத்திய-வடக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள (Hawks Nest என்ற இடத்தில், வெள்ளிக்கிழமை Migratory bird ஒன்றிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட பரிசோதனையில் H5N1 பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், பொதுமக்கள் யாரும் இதனால் பீதியடைய வேண்டாம் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர். Migratory bird கடல் பறவைகளிடம் கண்டறியப்படும் இப்பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் தனிப்பட்ட ஒரு சில நிகழ்வுகளா அல்லது வைரஸ் பரவலின் ஒரு பகுதியா என்பதை உறுதிப்படுத்த, துல்லியமான கண்காணிப்பும் பரிசோதனைகளும் மிகவும் […]

ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில், மாற்று வீரராகக் களம் புகுந்த லூயிஸ் சுவாரெஸ் , கொடுத்த கிராஸை (Cross) ஜோன் ஆரியாஸ் மிக லாவகமாகக் கோலாக மாற்றினார். செய்தி விளையாட்டு

கானாவை விரட்டியது கொலம்பியா

  • July 4, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில், ஜோன் ஆரியாஸ் (Jhon Arias) அடித்த ஒரேயொரு கோல் உதவியுடன் கானா அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி , கொலம்பியா அடுத்த சுற்றுக்கு (Round of 16) தகுதி பெற்றுள்ளது. ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில், மாற்று வீரராகக் களம் புகுந்த லூயிஸ் சுவாரெஸ் , கொடுத்த கிராஸை (Cross) ஜோன் ஆரியாஸ் மிக லாவகமாகக் கோலாக மாற்றினார். அதைத்தொடர்ந்து கொலம்பியா அணியின் கட்டுக்கோப்பான தடுப்பாட்டம் […]

மேல் மாகாணத்தில் அதிக அபாயமிக்க பகுதிகளை மையப்படுத்திய ,விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஜனாதிபதியின் விசேட பணிப்புரைகளுக்கு அமை இன்று (04 ஜூலை) காலை ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை செய்தி

டெங்கு ஒழிப்பு சமரில் முப்படைகள் களமிறக்கம்

  • July 4, 2026
  • 0 Comments

மேல் மாகாணத்தில் அதிக அபாயமிக்க பகுதிகளை மையப்படுத்திய ,விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஜனாதிபதியின் விசேட பணிப்புரைகளுக்கு அமை இன்று (04 ஜூலை) காலை ஆரம்பிக்கப்பட்டது. டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தி பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த பாரிய பொதுச் சுகாதார வேலைத்திட்டம் மேல் மாகாணம் முழுவதும் உள்ள அரச நிறுவனங்கள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்காக இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த அதிகளவான […]

உலகம்

தாய்லாந்தில் பௌத்த துறவிகளின் ஊர்வலத்தில் ஏற்பட்ட விபத்து – மரணங்கள் அதிகரிப்பு

  • July 4, 2026
  • 0 Comments

தாய்லாந்தில் பௌத்த துறவிகளின் ஊர்வலத்தில் கெப் ரக வாகனம் ஒன்று புகுந்து விபத்தை ஏற்படுத்தியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. குறித்த விபத்தால்  08 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், மேலும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் தற்போது குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   தொடர்புடைய செய்தி தாய்லாந்தில் துயரம் -துறவிகளுக்கு எமனாக வந்த 11 வயது சிறுவன்