இலங்கை

குழந்தைகளிடையே டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு – மருத்துவர்கள் எச்சரிக்கை

குழந்தைகளிடையே டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட சில குழந்தைகள் நோயிலிருந்து குணமடைந்த பிறகும் கூட சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் (LRH) குழந்தை நல மருத்துவ ஆலோசகர் டாக்டர் தீபால் பெரேரா, அரிதான சந்தர்ப்பங்களில் டெங்கு மூளை பாதிப்பிற்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடுமையான தசை மற்றும் எலும்பு வலியை ஏற்படுத்தி, இதயத்தையும் பாதிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

வழக்கமாக குணமடைய ஏழு முதல் எட்டு நாட்கள் ஆகும் என்றும், சில காலங்கள் கழித்தும்கூட பசி திரும்புதல், சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மாறுதல் போன்ற முன்னேற்றத்தின் அறிகுறிகள் தென்படாமல் போகலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில்  கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைத் தொடர்ந்து அகற்றுமாறும், குறிப்பாக மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை கொசுக்கடியைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்