அரசியல் இலங்கை செய்தி

சிறைச்சாலையைக்கூட நிர்வகிக்க முடியவில்லை: அரசுமீது எதிரணி விமர்சனக் கணை தொடுப்பு

“சிறைச்சாலைக் கட்டமைப்பைக் கூட முறையாக நிர்வகிக்க முடியாத தேசிய மக்கள் சக்தியினரால் இந்நாட்டை முறையாக ஆள முடியுமா? அவர்களால் நிச்சயமாக முடியாது. அதனால்தான் அவர்கள் ஏதேச்சாதிகார வழியில் பயணிக்க முற்படுகின்றனர்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாகச் சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது:

“மஹர சிறைச்சாலையிலும் தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. சிறைச்சாலைகளைக் கூட இந்த ஆட்சியாளர்களால் முறையாக நிர்வகிக்க முடியவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.

சிறைச்சாலைக் கட்டமைப்பைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாமல், அங்கு நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாத இந்த ஆட்சியாளர்கள், எவ்வாறு நாட்டை ஆள்வார்கள்? நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வை வழங்குவார்கள்?

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், சிறைச்சாலைகள் மற்றும் நீதி அமைச்சருக்கு எதிராக நாங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தோம். ஆனால், அதனை ஆளுங்கட்சியினர் வாக்களித்துத் தோற்கடித்தனர். அதுமட்டுமல்லாமல், எங்களைப் பரிகாசமும் செய்தனர்.

தற்போது நீதி அமைச்சர் எங்கே இருக்கிறார்? அவரைப் பாதுகாத்த ஆளுங்கட்சியினரால் இனி மக்கள் முன் தலைகாட்ட முடியுமா?”– என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை