இலங்கை செய்தி

டெங்கு ஒழிப்பு சமரில் முப்படைகள் களமிறக்கம்

மேல் மாகாணத்தில் அதிக அபாயமிக்க பகுதிகளை மையப்படுத்திய ,விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஜனாதிபதியின் விசேட பணிப்புரைகளுக்கு அமை இன்று (04 ஜூலை) காலை ஆரம்பிக்கப்பட்டது.

மேல் மாகாணத்தில் அதிக அபாயமிக்க பகுதிகளை மையப்படுத்திய ,விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஜனாதிபதியின் விசேட பணிப்புரைகளுக்கு அமை இன்று (04 ஜூலை) காலை ஆரம்பிக்கப்பட்டது.

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தி பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த பாரிய பொதுச் சுகாதார வேலைத்திட்டம் மேல் மாகாணம் முழுவதும் உள்ள அரச நிறுவனங்கள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் முன்னெடுக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சிக்காக இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த அதிகளவான படையினர், சுகாதார அதிகாரிகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முப்படையினர் சுற்றுப்புறத் தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகள், நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுதல், அடைப்பட்டுள்ள வடிகான்களைச் சுத்திகரித்தல் மற்றும் அதிக அபாயமிக்க பகுதிகளில் வாழும் மக்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை