பாலஸ்தீன கொடியுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட எகிப்து பயிற்சியாளர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் எகிப்து அணி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை, பாலஸ்தீன மக்களுக்கு சமர்ப்பிப்பதாக எகிப்து அணியின் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியை ஒட்டுமொத்த அரபு உலகத்துடன் சேர்ந்து பாலஸ்தீன மக்களும் இரவு முழுவதும் கொண்டாடினர். டல்லாஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான (Round of 32) போட்டியில், கூடுதல் நேர முடிவில் எகிப்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 1-1 என சமநிலை வகித்தன. அதைத்தொடர்ந்து நடந்த பெனால்டி […]













