செய்தி

ஆண்டி பர்ன்ஹாமிற்கு உள்ள சவால் : கெய்ர் ஸ்டாமர் விளக்கம்

  • July 4, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் கெயர் ஸ்டாமர், அடுத்ததாக ஆட்சியை பொறுப்பேற்க காத்திருக்கும் ஆண்டி பர்ன்ஹாமிற்கு முக்கிய செய்தியொன்றை வழங்கியுள்ளார். அதாவது சர்வதேச விவகாரங்களில் ஸ்டாமர் செலவிட்ட நேரத்தை விட அதிக நேரத்தை அடுத்த பிரதமர் செலவிட நேரிடும் எனக் குறிப்பிட்டுள்ளார். பிபிசி ஊடகத்திற்கு பிரத்தியேகமாக வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஒரு வருங்காலப் பிரதமர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு இடையே ஒரு தெளிவான கோட்டை வரைய முடியும் என்ற கருத்தை மறுத்த அவர், நவீன […]

உலகம்

அமெரிக்காவின் சுதந்திர தின அணிவகுப்பு இரத்து

  • July 4, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் 250 ஆவது   சுதந்திர தின அணிவகுப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. வொஷிங்டன் டி.சியில் இன்று காலை 10.30  மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த அணிவகுப்பானது கடுமையான வெப்ப அலை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய வானிலை ஆய்வு மையம் கொலம்பியா மாநிலத்திற்கு கடுமையான வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது. அங்கு 110 முதல் 115 டிகிரி வெப்பநிலை பதிவாகும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முதன்மை முன்னுரிமை அளித்து, விரிவான […]

உலகம்

அமெரிக்காவில் கம்யூனிச அச்சுறுத்தல் : ட்ரம்ப் கூப்பாடு

  • July 4, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் கம்யூனிச அச்சுறுத்தல் மீண்டும் தலைத்தூக்கியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 250வது பிறந்தநாளை முன்னிட்டு ரஷ்மோர் (Rushmore) மலையில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த மகத்தான ஆண்டுவிழாவை நாம் நெருங்கும்போது, ​​நமது அமெரிக்க அடையாளம் ஒரு புதிய தாக்குதலுக்கு உள்ளாவதைக் காண்கிறோம். நமது நாட்டில் கம்யூனிச அச்சுறுத்தல் மீண்டும் தலைதூக்கியுள்ளது” என்றார். ஜனநாயகக் கட்சியின் அதிகார எதிர்ப்பு இடதுசாரிகள் அமெரிக்கத் தேர்தல்களில் பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ள […]

உலகம்

அமெரிக்காவில் முவ்வாயிரத்திற்கும் மேற்பட் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவு

  • July 4, 2026
  • 0 Comments

இந்த மாதத்தில் காட்டுத்தீ ஏற்படுவதற்கு சாதாகமான வானிலை காணப்படுவதாகவும், இதனால் அமெரிக்காவிற்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் காடுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஜுன் 30 ஆம் திகதிவரை அண்ணளவாக 157 சதவீதமான நிலப்பரப்பு காட்டுத்தீயினால் சாம்பலாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுவரை 36,262 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், 13 மாநிலங்களில் குறைந்தது 49 பெரிய தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையே கொலராடோ, யூட்டா, நியூ மெக்சிகோ, நெவாடா மற்றும் ஒரேகான் […]

“ஆளும் மற்றும் எதிரணிகளுக்கு தமது அரசியல் நிலை பற்றி தெரிந்துகொள்வதற்கு மாகாணசபைத் தேர்தல் அவசியம். எனவே, அது நடத்தப்பட வேண்டும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். செய்தி

மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்துமாறு வலியுறுத்து

  • July 4, 2026
  • 0 Comments

“ஆளும் மற்றும் எதிரணிகளுக்கு தமது அரசியல் நிலை பற்றி தெரிந்துகொள்வதற்கு மாகாணசபைத் தேர்தல் அவசியம். எனவே, அது நடத்தப்பட வேண்டும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு , “ பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்பில் இந்த அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. வர்த்தகர்களின் தேவைக்கேற்ப செயல்படுகின்றது. மக்கள் யார் பக்கம் என்பதை அறிவதற்காக அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும். எதிரணிகளின் விமர்சனத்தை போலியான தகவல் […]

இலங்கை

சாதாரணத் தரப் (O/L) பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு!

  • July 4, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரணப் பரீட்சைகளுக்கான இணையவழி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஜூலை 23 ஆம் திகதிவரை இந்த விணணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி, அனைத்து பாடசாலை மாணவர்களும்  தத்தமது பாடசாலைகளின் அதிபர்கள் ஊடாக  இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதேசமயம், தனியார் பரீட்சார்த்திகள் பரிந்துரைக்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி தனித்தனியாகத் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விசேடமாக  தனியார் பரீட்சார்த்திகள்  விண்ணப்பிக்கும்போது தங்களது தேசிய அடையாள அட்டையை (NIC) பயன்படுத்த வேண்டும் […]

இலங்கை

லிட்ரோ  சமையல் எரிவாயுவின்  விலை  குறைப்பு

  • July 4, 2026
  • 0 Comments

லிட்ரோ  சமையல் எரிவாயுவின்  விலை  நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ சிலிண்டரின் விலை  300 ரூபாவால் குறைக்கப்பட்டு 4,465 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 05 கிலோ சிலிண்டரின் விலை 118 ரூபாவால் குறைக்கப்பட்டு 1,792 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், 2.3 கிலோ சிலிண்டரின் விலை 55 ரூபாவால் குறைக்கப்பட்டு 835 ரூவாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச எல்பி எரிவாயு விலைகளில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு இணங்க, உள்நாட்டு எல்பி எரிவாயு சிலிண்டர்களின் விலையைக் குறைக்க முடிவு […]

உலகம் செய்தி

சமரசத்துக்கு துடிக்கும் ஈரான் – ஒருவார கால அவகாசம்

  • July 4, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ள ஈரான் விரும்புவதாகவும், கமேனியின் இறுதிச் சடங்கிற்காக தெஹ்ரானுக்கு வாஷிங்டன் ‘ஒரு வாரம் அவகாசம்’ அளித்துள்ளதாகவும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் மரணத்தைக் குறிப்பிட்டு , டிரம்ப் இதனைப் பேசியுள்ளார். அமெரிக்காவின் 250-வது ஆண்டு கொண்டாட்டங்களைத் தொடங்கி வைக்கும் வகையில், வெள்ளிக்கிழமை இரவு மவுண்ட் ரஷ்மோரில் (Mount Rushmore) நடைபெற்ற நிகழ்வில் டிரம்ப் உரையாற்றினார். அப்போது அமெரிக்காவின் […]

தனது முதல் உலகக் கோப்பை தொடரில் விளையாடும் ஆப்பிரிக்க நாடான கேப் வெர்டே, மியாமி மைதானத்தில் திரண்டிருந்த 64,478 ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இருமுறை அர்ஜென்டினாவின் முன்னிலையைச் சமன் செய்து மிரட்டியது. செய்தி விளையாட்டு

உச்ச கட்ட பரபரப்பு – போராடி வென்றது அர்ஜென்டினா

  • July 4, 2026
  • 0 Comments

விறுவிறுப்பான ஆட்டத்தில், அசத்தலான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய கேப் வெர்டே (Cape Verde) அணியை, கூடுதல் நேரத்தில் அடிக்கப்பட்ட Own Goal உதவியுடன் 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா உலகக் கோப்பையின் அடுத்த சுற்றுக்கு (Last 16) தகுதி பெற்றுள்ளது. தனது முதல் உலகக் கோப்பை தொடரில் விளையாடும் ஆப்பிரிக்க நாடான கேப் வெர்டே, மியாமி மைதானத்தில் திரண்டிருந்த 64,478 ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இருமுறை அர்ஜென்டினாவின் முன்னிலையைச் சமன் செய்து மிரட்டியது. கூடுதல் […]

இலங்கை செய்தி

சிறைச்சாலைகளில் 70 சதவீதமானோர் போதைக்கு அடிமை

  • July 4, 2026
  • 0 Comments

சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளோரில் சுமார் 70 சதவீதமானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டுச் சபை, ஜனாதிபதி தலைமையில் கூடியது. மூன்று பீடங்கள் மகா சங்த்தினத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற கூட்டத்தின்போதே மேற்படி தகவல் வெளியிடப்பட்டது. அத்துடன், கடும் பிரச்சனையாக மாறியுள்ள சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதில் அவர்கள் தொடர்பாக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. போதைப்பொருளுக்கு அடிமையானோரை புனர்வாழ்வளிப்பதற்கான சட்டமூலமும் […]