உலகம் செய்தி

முதலையைத் திருமணம் செய்த மெக்சிகோ நகர மேயர்

முதலையைத் திருமணம் செய்த மெக்சிகோ நகர மேயர்

மெக்சிகோவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒக்ஸாகா (Oaxaca) மாகாணத்தின் சான் பருத்தி ஹுவாமெலுலா (San Pedro Huamelula) என்ற சிறிய கடலோர மீன்பிடி கிராமத்தின் மேயர் விக்டர் ஹியூகோ சோசா (Victor Hugo Sosa), பெண் முதலை ஒன்றை பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார்.

பாரம்பரிய இசை மற்றும் நடனங்களுடன் மிக விமரிசையாக நடைபெற்ற இந்தத் திருமண விழாவில், மணமகளான முதலையின் வாய்ப் பகுதி (கடிக்காமல் இருப்பதற்காக) கயிற்றால் கட்டப்பட்டிருந்தது.

மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேயர் அந்த முதலையின் மூக்குப் பகுதியில் முத்தமிட்டுத் திருமணத்தை உறுதி செய்தார்.

இந்த விசித்திரமான சடங்கு, ஸ்பானியர்களின் வருகைக்கு முந்தைய காலத்திலிருந்தே அங்குள்ள ‘சோண்டல்’ (Chontal) மற்றும் ‘ஹுவாவே’ (Huave) பழங்குடியின மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.

“எங்கள் கிராமத்திற்குப் போதிய மழை கிடைக்க வேண்டும், ஆற்றில் நிறைய மீன்கள் கிடைக்க வேண்டும், உணவுக்குப் பற்றாக்குறை வரக்கூடாது என இயற்கையிடம் வேண்டுவதற்காகவே இந்தத் திருமணம் நடத்தப்படுகிறது” என்று மேயர் சோசா தெரிவித்துள்ளார்.

ஏழு வயதான இந்த பெண் முதலை (Caiman) அங்குள்ள மக்களால் ‘குட்டி இளவரசி’ என்று அழைக்கப்படுகிறது.

இது பூமித் தாயைக் குறிக்கும் ஒரு தெய்வமாக அவர்கள் கருதுகின்றனர். இந்த முதலையை உள்ளூர் தலைவரான மேயர் திருமணம் செய்வது என்பது, மனிதர்களை தெய்வீகத்தோடு இணைப்பதைக் குறிக்கும் ஒரு குறியீடாகும்.

தற்போது கத்தோலிக்க ஆன்மீக வழிபாட்டுடனும் கலந்துள்ள இந்தச் சடங்கில், முதலைக்கு வெள்ளை நிற திருமண ஆடை (Wedding Dress) மற்றும் பல வண்ண ஆடைகள் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது.

மங்கள இசை முழங்க, கிராம மக்கள் அந்த முதலை மணமகளைத் தங்களது கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக வீதிகளில் எடுத்துச் சென்றனர். “இந்த விழா எனக்குப் பெருமகிழ்ச்சியையும், எனது பாரம்பரியத்தின் மீதான பெருமையையும் தருகிறது” என இந்தத் திருமணத்தை முன்னின்று நடத்திய எலியா எடித் அகிலார் என்ற பெண்மணி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி