உலகம் செய்தி

நீதிகோரும் போராட்டத்தை ஈரான் கைவிடாது

  • July 4, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நீதி கோரும் போராட்டத்தை ஈரான் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi தெரிவித்துள்ளார். மறைந்த ஈரானின் உச்ச தலைவருக்குஅஞ்சலி செலுத்த பல்வேறு உலக நாடுகளின் பிரதிநிதிகள் வருகை தந்தது ஈரானிய மக்களின் பெருமையையும் வலிமையையும் உலகுக்கு பறைசாற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார். ” நீதி பெறுவது என்பது ஒரு நிலையான லட்சியமாக இருக்கும். மேலும், சர்வதேச தலைவர்களின் வருகையானது ஈரானின் அரசியல் அந்தஸ்தை உறுதிப்படுத்தியுள்ளது.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

மோதர பகுதியில் இரு கைத் துப்பாக்கிகள் மீட்பு

  • July 4, 2026
  • 0 Comments

கொழும்பு – மோதர பகுதியில் இருந்து இரண்டு கைத் துப்பாக்கிகள் இன்று  மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மோதர நிபுணா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் சகோதரரான  சதுரையாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் இந்த துப்பாகிகள் பற்றி தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் துப்பாக்கியை மீட்டுள்ளனர். இந்த சந்தேக நபர் சமீபத்தில் துபாயிலிருந்து நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டார். தற்போது 90 நாட்கள் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

தமிழக அரசியலில் அரங்கேறும் குதிரை பேரத்தை தடுக்கு மாறுகோரி ஆளுநர் அர்லேகரிடம் , அதிமுகவினர் இன்று முறைப்பாட்டு மனு கையளித்தனர். செய்தி

தமிழக அரசியலில் குதிரை பேரம்: ஆளுநரிடம் முறைப்பாடு

  • July 4, 2026
  • 0 Comments

தமிழக அரசியலில் அரங்கேறும் குதிரை பேரத்தை தடுக்கு மாறுகோரி ஆளுநர் அர்லேகரிடம் , அதிமுகவினர் இன்று முறைப்பாட்டு மனு கையளித்தனர். ஆளுநரை சந்தித்து மனுவை கையளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அதிமுக மூத்த தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி , “குதிரை பேரம் தொடர்பாக ஏற்கெனவே ஆளுநர் மற்றும் சட்டப்பேரவை தலைவரிடத்தில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆளுநரிடம் மீண்டும் ஒரு மனுவை கொடுத்துள்ளோம்.” என்றார். ஆளுநருக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் மனுவின் […]

2026 ஜனவரி முதல் ஜுலை 03 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 58 ஆயிரத்து 810 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை

இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு: மரண எண்ணிக்கை அதிகரிப்பு

  • July 4, 2026
  • 0 Comments

இலங்கையில் கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் டெங்கு நோயால் 3 ஆயிரத்து 422 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2026 ஜனவரி முதல் ஜுலை 03 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 58 ஆயிரத்து 810 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. மேல் மாகாணத்திலேயே 30 ஆயிரத்து 876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த பாதிப்பில் 52.50 சதவீதமாகும். 142 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு, அதி அபாய டெங்கு […]

ஐரோப்பா

ஜென் Z தலைமுறையினருக்காக புதிய வீட்டுத்திட்டம் – பரன்ஹாம் பரிசீலனை

  • July 4, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஆண்டி பர்ன்ஹாம், தலைமுறை தலைமுறையாக நிலவும் செல்வ இடைவெளியைக் குறைக்கவும், இளைஞர்களுக்கு, குறிப்பாக ஜென் Z தலைமுறையினருக்கு ஆதரவளிக்கவும் புதிய  கொள்கைத் தொகுப்பைப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய வீட்டு கட்டுவதற்கான அல்லது சொந்தமாக வீடொன்றை கொள்வனவு செய்ய உதவும் நோக்கில்  இளைஞர்களின் முழுநேரப் பணியின் முதல் மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பில் பரீசிலனை செய்து வருவதாக  கூறப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு £3.5 பில்லியன் செலவாகும் என […]

தொல்லியல் மற்றும் கலாசார மரபுத் தளங்களை உரிய முறையில் பாதுகாக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா வலியுறுத்தியுள்ளார். கல்வி செய்தி

கலாசார மரபுத் தளங்களை பாதுகாக்குமாறு பிரதி அமைச்சர் பணிப்பு

  • July 4, 2026
  • 0 Comments

தொல்லியல் மற்றும் கலாசார மரபுத் தளங்களை உரிய முறையில் பாதுகாக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா வலியுறுத்தியுள்ளார். திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்திற்கு பிரதி அமைச்சர் இன்று (04) நேரில் சென்று கள விஜயம் மேற்கொண்டார். இயற்கை பேரிடர்களால் சேதமடைந்திருந்த இத்தலம், கடந்த ஆட்சிக் காலங்களில் சில சமூக விரோதிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளால் மேலும் சேதப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொல்லியல் மற்றும் கலாசார மரபுத் தளத்தை உரிய முறையில் பாதுகாக்கவும், […]

அலி கமேனியின் செல்வாக்கு தலைமுறைகளைக் கடந்து நினைவுகூரப்படும் - என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் புகழாரம் சூட்டியுள்ளார். உலகம் செய்தி

அலி கமேனியின் செல்வாக்கு என்றும் நினைவுகூரப்படும் – பாகிஸ்தான் பிரதமர் உருக்கம்

  • July 4, 2026
  • 0 Comments

அலி கமேனியின் செல்வாக்கு தலைமுறைகளைக் கடந்து நினைவுகூரப்படும் – என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஒரு முக்கிய மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தானின் பிரதமர் , தெஹ்ரானில் நடைபெற்ற இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இதுகுறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் ஷெரீப், “அலி கமேனியின் ஞானம், தலைமைத்துவம் மற்றும் ஈரான் மீதும் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் மீதும் அவர் செலுத்திய செல்வாக்கு தலைமுறைகளைக் கடந்து நினைவுகூரப்படும்” என்று […]

ஐரோப்பா

பதற்றத்தை அதிகரிக்க உக்ரைன் சூளுரை : புட்டின் பிறப்பித்த உத்தரவு

  • July 4, 2026
  • 0 Comments

உக்ரைன் மீது  இரவு முழுவதும் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன், பத்து பேர் காயமடைந்தனர். இதற்கு முன்னர், கீவ் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் குறைந்தது முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 91 பேர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் பதற்றத்தை அதிகரிக்கப் போவதாக சூளுரைத்துள்ளன. உக்ரைனின் இராணுவ-தொழில்துறை வளாகத்திற்கு எதிரான “மிகப்பெரிய, ஒருங்கிணைந்த தாக்குதல்கள்” தொடர வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்  கட்டளையிட்டுள்ளார். டான்பாஸ் பகுதியில் உள்ள ஒரு முக்கிய […]

இலங்கை

குழந்தைகளிடையே டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு – மருத்துவர்கள் எச்சரிக்கை

  • July 4, 2026
  • 0 Comments

குழந்தைகளிடையே டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட சில குழந்தைகள் நோயிலிருந்து குணமடைந்த பிறகும் கூட சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் (LRH) குழந்தை நல மருத்துவ ஆலோசகர் டாக்டர் தீபால் பெரேரா, அரிதான சந்தர்ப்பங்களில் டெங்கு மூளை பாதிப்பிற்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் கடுமையான தசை மற்றும் எலும்பு வலியை ஏற்படுத்தி, இதயத்தையும் பாதிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார். வழக்கமாக குணமடைய ஏழு முதல் […]

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன், தமிழ் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இலங்கை செய்தி தமிழ்நாடு

தமிழக எதிர்க்கட்சி தலைவருடன் தமிழ் தேசியப் பேரவையினர் சந்திப்பு

  • July 4, 2026
  • 0 Comments

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன், தமிழ் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இன்று காலை 10.00 மணியளவில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், செல்வராஜா கஜேந்திரன், பொன்னுத்துரை கங்கரநேசன், சட்டத்தரணி கே.வி. தவராசா, தர்மலிங்கம் சுரேஷ், சட்டத்தரணி சுகாஸ், சட்டத்தரணி நடராஜா காண்டீபன் உள்ளிட்ட தமிழ் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். இது தொடர்பாக கஜேந்திரகுமார் […]