உலகம்

கடும் வெப்பம் : நெரிசலான வாழ்கை – பாபா தீவின் அவல நிலை

பாகிஸ்தானின் தலைநகரமும் பெருநகரமுமான கராச்சியின் கடற்கரைக்கு அப்பால் அமைந்துள்ள பாபா தீவில் வெப்பநிலை உயர்வால் மக்கள் தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஒரு சதுரக் கிலோமீற்றர் பரப்பளவுக் கொண்ட குறித்த பகுதியில் 25000 பேர் வசிக்கின்றன்.

அந்த பகுதியில் வீடுகள் நெருக்கமாகக் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக கட்டப்பட்டுள்ளன. இதன்காரணமாக கடுமையான வெப்ப அலையில் அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு, அன்றாட அழுத்தங்கள் பெரும்பாலும் இன்னும் அதிகமாக உள்ளன. கோடை காலங்களில் 45°C-க்கும் அதிகமான வெப்பத்தை மக்கள் அனுபவிக்கின்றனர்.

ஆனால், பெண்களுக்கு நடமாடும் சுதந்திரம் குறைவாகவே உள்ளது. அவர்கள் தங்கள் நாட்களைக் குறைந்த காற்றோட்டம் கொண்ட நெரிசலான வீடுகளில் கழிக்கின்றனர். ஆண்களைப் போல வெப்பமான நாட்களில் கடலில் குதிக்கும் வாய்ப்பும் அவர்களுக்கு இல்லை.

ஒரு பெண் கர்ப்பமாகும்போது, ​​இந்த வெப்பம் இன்னும் ஆபத்தானதாக மாறுகிறது. “கோடை மாதங்களில், மக்கள் தொகையில் சுமார் 30 முதல் 40 சதவீதம் பேர் ஏதேனும் ஒரு விதமான பாதகமான நிகழ்வை எதிர்கொள்கின்றனர்,

ஆண்டின் வெப்பமான காலங்களில், குறைமாதத்தில் பிறந்து தீவிர சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது, அதே சமயம் மற்ற குழந்தைகள் நரம்பியல் அல்லது இதயப் பிரச்சனைகளுடன் பிறப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்