உலகம்

மணிக்கு 290 கி.மீ காற்றுடன் கரையை கடந்த பாவி புயல்

  • July 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் சூப்பர் புயலாக உருமாறியிருந்த பாவி புயல் நேற்று கரையை கடந்துள்ளது. இதன்போது குவாம் மற்றும் வடக்கு மரியானா தீவுகள் கடும் மழையை எதிர்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தேசிய வானிலை சேவை (NWS) வெளியிட்டுள்ள தகவலின்படி, மேற்படி புயலானது ரோட்டா தீவின் மீது நகர்ந்தபோது, மணிக்கு 290 கி.மீ (180 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடல் அலைகள் கிட்டத்தட்ட 11 மீட்டர் (35 அடி) உயரத்திற்கு எழுந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புயல் குறித்த எச்சரிக்கைகள் […]

ஐரோப்பா

எட்னா எரிமலை வெடிப்பு : சிசிலியில் விமான சேவைகள் இரத்து

  • July 6, 2026
  • 0 Comments

ஐரோப்பாவின் மிகப் பெரிய எரிமலையான எட்னா எரிமலை மீண்டும் வெடித்து சாம்பல் மற்றும் புகையை வெளியேற்றி வருகிறது. இதன் காரணமாக, சிசிலியின் பரபரப்பான விமானப் போக்குவரத்து மையமான கட்டானியா விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டன. இத்தாலியின் விமானப் போக்குவரத்துக்கான எரிமலை கண்காணிப்பு மையம் (VONA), சாம்பல் மேகங்கள் குறித்த சிவப்பு எச்சரிக்கையை விடுத்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கட்டானியா விமான நிலையம், இன்று காலை முதல் உள்வரும், புறப்படும் விமானங்களை இரத்து […]

உலகம்

அமெரிக்கா துருக்கிக்கு ஆயுதங்களை வழங்கக் கூடாது – இஸ்ரேல் முட்டுக்கட்டை

  • July 6, 2026
  • 0 Comments

அமெரிக்கா, துருக்கிக்கு (Turkey) அதிநவீன F-35 போர் விமானங்களையோ அல்லது அதற்கான ஜெட் இன்ஜின்களையோ விற்பனை செய்யக் கூடாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமான Fox Newsக்கு  அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் துருக்கிக்குச் சென்று அங்குள்ள நேட்டோ (NATO) மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் நிலையில், இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. துருக்கிக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்குவது “மத்திய கிழக்கின் அதிகார சமநிலையைக் […]

ஐரோப்பா

அதலபாதாளத்திற்கு சென்ற ரஷ்யாவின் கருவூலம் : அடுத்தக்கட்ட தடைகளும் தயார்நிலையில்

  • July 6, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் போர்க்காலப் பொருளாதாரச் சுமையின் பெரும்பகுதியை வங்கிகளே சுமப்பதால், அந்நாடு பாரிய நெருக்கடியை நோக்கி தள்ளப்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐரோப்பிய அரசின் உளவுத்துறை அறிக்கையொன்றில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ரஷ்ய வங்கிகளின் நிலை குறித்து ஐரோப்பிய அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதற்காகச் சமீபத்திய வாரங்களில் தயாரிக்கப்பட்ட இந்த இரண்டு பக்க ஆவணம், மேற்கத்திய நாடுகளின் மேலதிகக் கட்டுப்பாடுகளால் வங்கிகள் பாதிக்கப்படக்கூடிய தன்மையை விவரிக்கிறது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்து நெருக்கடியை அதிகரிக்க […]

ஐரோப்பா

நேட்டோ உச்சிமாநாடு : பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் துருக்கி

  • July 6, 2026
  • 0 Comments

அங்காராவில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டிற்காக, துருக்கி ஒரு அசாதாரணமான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், வான்பாதுகாப்பு படைகள் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தலைநகர் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுலை 07மற்றும் 08 ஆம் திகதிகளில் நடைபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்ள  32 நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே சாலை கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக் கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்றும், […]

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) இறுதிச்சடங்கு என்பது வெறும் தேசிய அளவிலான விடைபெறல் மட்டுமல்ல, தெஹ்ரானில் திரண்டிருந்த அந்த மக்கள் பெருங்கடல், இஸ்லாமியக் குடியரசை வீழ்த்த நினைத்த அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் விடுக்கப்பட்ட ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வீழ்த்த நினைத்த அமெரிக்காவுக்கு பாடம் கற்பித்த ஈரான் மக்கள்

  • July 6, 2026
  • 0 Comments

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) இறுதிச்சடங்கு என்பது வெறும் தேசிய அளவிலான விடைபெறல் மட்டுமல்ல, தெஹ்ரானில் திரண்டிருந்த அந்த மக்கள் பெருங்கடல், இஸ்லாமியக் குடியரசை வீழ்த்த நினைத்த அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் விடுக்கப்பட்ட ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுடன் தொடங்கிய போரினால் ஈரான் பலவீனமடைந்ததாகத் தெரியவில்லை. மாறாக, அது சவால்களுக்கு அடிபணியாத, ஒன்றுபட்ட, தங்களின் அடுத்தகட்ட நகர்வை தாங்களே […]

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தனக்கு பெரும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அந்த நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இச்சம்பவத்திற்கான பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இலங்கை செய்தி

பதவி விலகுமாறு நீதி அமைச்சருக்கு அழுத்தம்

  • July 6, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது பதவியை விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இன்று (06) வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: “நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் சுமார் 600 கைதிகளை மாத்திரமே தடுத்து வைக்க முடியும். ஆனால், அங்கு 2,000-க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளனர். இந்த இடநெருக்கடிப் பிரச்சினை நீண்டகாலமாகவே நிலவி வருகின்றது. எனவே, தற்போதைய […]

இலங்கை செய்தி

சிறைக்குள் நடந்தது என்ன? விசாரணை தீவிரம்

  • July 6, 2026
  • 0 Comments

07 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகள் உயிரிழப்புநீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 07 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது. 23 அதிகாரிகள் மற்றும் 54 கைதிகள் காயமடைந்துள்ளனர் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். அதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் என்பன விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன எனவும் அமைச்சர் கூறினார். நீர்கொழும்பு சிறைச்சாலை மற்றும் அதனைசூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  

உலகம்

ஈரான் மற்றும் கத்தாருக்கு இடையேயான கடல்வழி வர்த்தகம் மீள ஆரம்பம்

  • July 6, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் கத்தாருக்கு இடையேயான கடல்வழி வர்த்தகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் வர்த்தகத் தூதர்  அப்பாஸ் அப்தோல்கானி (Abbas Abdolkhani)  நேற்று அறிவித்தார். தோஹாவில் உள்ள ஈரானிய தூதரகம் மற்றும் கத்தார் அதிகாரிகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து, ஈரானின் தயர் துறைமுகத்திற்கும் கத்தாரின் அல் ருவைஸ் துறைமுகத்திற்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார். புவியியல் ரீதியாக எதிரெதிராக அமைந்துள்ள இவ்விரு துறைமுகங்களும் முக்கியமாக பிராந்திய வர்த்தகத்திற்கு உதவுகின்றன. போரின் போது தயர் துறைமுகம் […]

இலங்கை

சிறைச்சாலை வன்முறை – வெளிப்படையான விசாரணைக்கு சஜித் அழைப்பு

  • July 6, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த கொடூரமான வன்முறை குறித்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு அழைப்பு விடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலவரத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் காயங்களும் சிறை நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்குலைவையும் நிறுவனத் திறமையின்மையையு காரணமாக குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய அவர், ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்தபோது, ​​சிறைகளுக்குள் நிகழும் மரணங்களுக்கு அரசாங்கங்கள் பொறுப்பேற்க வேண்டும் […]