நேட்டோ உச்சிமாநாடு : பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் துருக்கி
அங்காராவில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டிற்காக, துருக்கி ஒரு அசாதாரணமான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், வான்பாதுகாப்பு படைகள் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தலைநகர் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜுலை 07மற்றும் 08 ஆம் திகதிகளில் நடைபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்ள 32 நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே சாலை கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக் கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்றும், முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு பலபடுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, உச்சிமாநாடு நடைபெறும் அதிபர் வளாகத்தையும் தாண்டி விரிவடைந்துள்ளது. விமான நிலையங்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்கும் ஹோட்டல்கள் மற்றும் அங்காராவின் பல முக்கிய போக்குவரத்து வழித்தடங்களைச் சுற்றியும் அணுகல் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த துருக்கி அராசங்கம் தயாராகி வருகிறது.




