இலங்கை

மூதுரில் சோகம் – பிரான்ஸ் செல்ல இருந்த இளைஞர் விபத்தில் சிக்கி மரணம்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் – ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் இன்று நேற்று மாலை (02) இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மூதூர் – கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் (வயது21) மற்றும் அருணவன் செல்வரெத்தினம் (வயது ) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவரும், மற்றொருவர் பிரான்ஸ் செல்லத் தயாராக இருந்த இளைஞர் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த விபத்துடன் தொடர்புடைய ரிப்பர் வாகனத்தின் சாரதி மூதூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து உள்ளதாகவும்
உயிரிழந்த இருவரின் சடலங்களும் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்