உலகம்

நைஜீரியாவில் ஆயுதமுனையில் கடத்தப்பட்ட பெண்கள் – 12 பேர் கொலை

நைஜீரியாவின் வடமேற்கு சொகோட்டோ (Sokoto) மாநிலத்தில் உள்ள கிராமத்தின்மீது ஆயுதம் ஏந்திய நபர்கள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு குடும்பத்தின் வீட்டிற்குத் தீ வைத்ததில், அக்குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் தீயில் கருகி உயிரிழந்ததாக அப்பகுதிவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் லஜிங்கே கிராமத்திற்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 3 மணி வரை கிராமவாசிகளைத் தாக்கியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

நைஜீரியா ஆயுதம் ஏந்திய நபர்களில் தொடர் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது. இவர்கள் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி, பணத்திற்காக கிராமவாசிகளைக் கடத்திச் செல்வதுடன், கால்நடைகளையும் திருடிச் செல்கின்றனர்.

காவல்துறை இது குறித்து விசாரித்து வருவதாகவும், பின்னர் கூடுதல் தகவல்கள் வழங்கப்படும் என்றும் சொகோட்டோ படை செய்தித் தொடர்பாளர் அகமது ருஃபாய் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்